Thursday, January 13, 2011

அனல் மேலே பனித்துளி... (பொங்கல் சிறப்பு சிறுகதை) - 100 வது பதிவு


முன்குறிப்பு:
இது என்னோட 100 வது பதிவு... தொடர்ந்து என் பக்கத்தை படித்து வரும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த கதையில் வரும் கொங்கு கிராமத்து பேச்சு வழக்கு எனக்கு பெரிதாய் பரிச்சயம் இல்லை... இது போன்ற கிராமத்தில் நான் வாழ்ந்தவளும் இல்லை... கேள்வி ஞானமும் படித்ததும் தான்... தவறிருந்தால் சுட்டி காட்டுங்கள்... நன்றி

இனி கதை....

அன்று மிகவும் உற்சாகமாய் இருந்தான் சங்கர். ஒரு மாத இரவு பகல் பாராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியில் மிதந்து கொண்டிருந்தான்

அந்த பெரிய கிளயன்ட்டின் ப்ராஜெக்ட் ஒகே ஆனதில் தன் டீமில் நிறைய பேரின் வேலையை காப்பாற்றிய நிம்மதியில் இருந்தான்

அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணத்தின் பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடத்தில், அரை ஏக்கரில் மாளிகையாய்  அமைந்த தன் வீட்டை நெருங்கும் போதே, அந்த மாற்றம் உறுத்தியது சங்கருக்கு

கார் சத்தம் கேட்டதும் garage கதவு திறந்து முன் வாசலில் வந்து நிற்கும் மனைவியை காணோம். காரை விட்டு இறங்கும் முன் "டாடி" என தாவும் மகளையும் காணோம்

காலிங் பெல் அடிக்கவும் வீட்டில் வேலை செய்யும் சீனப்பெண் வந்து கதவை திறந்தாள்

"Did Preethi and her mom went out?" என கேட்க

"No... up...room" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்க முயன்றாள். அதை கேட்டதும் சங்கரின் முகத்தில் சற்று முன் இருந்த உற்சாகம் காணாமல் போனது. உள்ளே இருந்து கொண்டே ஏன் தான் வந்தும் கீழே வரவில்லை என குழம்பினான்

வேகமாய் படியேறினான். ஒவ்வொரு அறையாய் தேடியவன், வெளிப்புற terrace பெஞ்ச்ல் மனைவியும் மகளும் ஆளுக்கு ஒரு புத்தகத்தில் புதைந்திருப்பதை பார்த்ததும்

"ஹலோ மை ஸ்வீட் ஏஞ்செல்ஸ்" என இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்தான்

மகள் அவனை விட்டு விலகி அமர "என்னாச்சுடி செல்லம்... அம்மா திட்டினாளா?" எனவும்

"வேண்டாம்... என்னை வம்பிளுக்காதீங்க சொல்லிட்டேன்" என்றாள் அவன் மனைவி செல்வி

"மம்மி...டாடிகிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல... ஏன் பேசற?" என சீறினாள் சங்கரின் ஐந்து வயது செல்லம் ப்ரீத்தி

"ஏய் குட்டி வாலு... என்னடி அத்தன கோபம் இப்போ?" என வலுக்கட்டாயமாய் அவளை தூக்கி மடியில் இருத்த முயன்றான்,  திமிறினாள் ப்ரீத்தி

"என்ன செல்வி நீயாச்சும் சொல்லேன்... என்னாச்சு?" என பாவமாய் சங்கர் கேட்க அதற்கு மேல் செல்வியால் மௌனமாய் இருக்க இயலவில்லை

"இன்னிக்கி ப்ரீத்தி ஸ்கூல் chirstmas concert க்கு வரேன்னு சொன்னீங்கல்ல... பாவம் கொழந்த எவ்ளோ எதிர்பாத்துட்டு இருந்தா தெரியுமா? நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு மிஸ் Maddy கிட்ட கேட்டு அவ ப்ரோக்ராம் கூட கடைசிக்கு மாத்த சொன்னா கொழந்த" என கூறவும் சங்கர் குற்ற உணர்வில் தவித்தான்

"சாரி ப்ரீத்தி குட்டி... ஆபீஸ்ல..." என்றவனை பேச விடாமல் இடை மறித்தாள் ப்ரீத்தி

"ஐ ஹேட் யு டாடி... சும்மா பொய் சொல்லாத... ஜூலி டாடி உன் ஆபீஸ் தானே... அவர் எல்லாம் மொதலே வந்து அவளுக்கு மேக்அப் எல்லாம் போட ஹெல்ப் பண்ணினார்... நான் ஜூலி வீட்டுலையே பொறந்து இருக்கலாம்... ஐ ஹேட் யு ஐ ஹேட் யு ஐ ஹேட் யு" என அழுது கொண்டே அன்னையிடம் சென்றவள் "மம்மி எனக்கு பசிக்குது" என செல்வியின் மடியில் விழுந்தாள்

சங்கர் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்

கணவனின் அதிர்ச்சியை புரிந்தவளாய் "உங்களுக்காக தான் சாப்பிடாம வெயிட் பண்றோம்...வாங்க சாப்பிடலாம்" என பேச்சை மாற்றினாள் செல்வி

"நீங்க சாப்பிடுங்க... நான் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்... " என்றபடி நகர்ந்தான்

                                              ****************************

"நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையா செல்வி?" என அருகில் படுத்திருந்த மனைவியின் கையை பற்றி கன்னத்தோடு இழைத்து கொண்டே கேட்டான் சங்கர்

"என்னப்பா நீங்க? கொழந்த சொன்னத போய் பெருசு பண்ணிக்கிட்டு... காலைல எழுந்ததும் ஹாய் டாடினு கழுத்த கட்டிப்பா பாருங்க... அவ்ளோ தான் உங்க மகளோட கோபத்துக்கு ஆயுசு" என கணவனுக்கு ஆதரவாய் பேசினாள் செல்வி

"அவ கோபத்துக்காக சொல்லலடி... எனக்கே ரெம்ப குற்ற உணர்வா இருக்கு... நானெல்லாம் சின்னதுல ஒரு சின்ன விசயம் செஞ்சா கூட எங்க அப்பா ஊரே சொல்லுவாரு... ஒவ்வொரு விசயத்தையும் கவனிச்சு எவ்ளோ என்கரேஜ் பண்ணுவாரு தெரியுமா..."

"......." அவனே பேசி மன பாரம் குறைக்கட்டும் என நினைத்தவளாய் மௌனமாய் இருந்தாள் செல்வி

"எப்ப பாரு ஆபீஸ் ஆபீஸ்னு நான் ப்ரீத்தியோட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல செல்வி... இன்னிக்கி ஸ்கூல்க்கு வரேன்னு சொன்னத கூட மறந்துட்டேன்...நெஜமா ரெம்ப கில்டியா இருக்கு... உங்கள வெளிய ஒரு அவுட்டிங் கூட்டிட்டு போய் கூட ஒரு மாசம் இருக்குமல்ல?" என்ற கணவனை ஆறுதலாய் பார்த்தவள் செல்வி

"நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?"

"என்ன?"

"பொங்கலுக்கு ஊருக்கு போலாமா? ரெம்ப நாளாச்சுங்க"

"ஏய் சொல்ல மறந்துட்டேன்... அம்மா இன்னைக்கி என் செல்லுக்கு கூப்ட்டாங்க..."

"தெரியும்... அதை இவ்ளோ நேரமா சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து பொறுமை போய் நானே பேச்சை எடுத்தேன்" என கோபமாய் கூறினாள்

"உனக்கு யாருடி சொன்னா? என்னை உளவு பாக்க ஆபீஸ்ல ஆள் செட் பண்ணி இருக்கியா?" என மையலாய் புன்னகைத்தான்

"அது ஒண்ணு தான் கொறச்சல்... நான் ஊருக்கு போன் பண்ணினேன் இன்னிக்கி... அத்தை தான் சொன்னாங்க உங்ககிட்ட பேசினதா"

"ஓ... சாரி சொல்ல மறந்துட்டேன்"

"உங்களுக்கு ஆபீஸ் தவிர வேற என்ன தான் நெனப்புல இருக்கு... வீட்டுல இருக்கற கொஞ்ச நேரமும் டிவி முன்னால... எதாச்சும் பேசுங்கன்னா என்ன பேசறதுனு சலிச்சுபீங்க... இந்த மாதிரி போன் விசயம் கூட சொல்றதில்ல" என முறைத்தாள்

"என்னடி இதுக்கு போய் கோவிச்சுக்கற?"

"பின்ன கொஞ்சுவாங்களா?"

"ஓ... கொஞ்சலாமே... என் அத்தை பெத்த ரத்தினமே, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல, செல்வி, என் செல்ல தமிழ்ச்செல்வி... அழகான பேருடி உனக்கு" என மனைவியின் இடையை சுற்றி அணைத்தான்

"போதுமே... நைட்ல இழைய வேண்டியது... காலைல எழுந்ததும் அழவெக்க வேண்டியது" என சலித்தாள்

"நான் எப்படா உன்ன அழவெச்சேன்?" என அவன் கேள்வியாய் நோக்க

"அப்ப இன்னிக்கி காலைல என்னை திட்டினது கூட நெனப்பில்லையா?" என முறைத்தாள்

"இன்னைக்கா?" என அவன் புரியாமல் விழிக்க

"சமாதானம் செய்யாட்டி கூட பரவாயில்ல... திட்டனதே நெனப்பில்லைனா... உங்கள திருத்தவே முடியாது" என அவன் கையை விலக்கி மறுபுறம் திரும்பி படுத்தாள்

"ஏய்... காலைல கெளம்பற அவசரத்துல எதாச்சும் டென்சனா பேசி இருப்பேன்... அதை போய் பெருசு படுத்துறியே கண்ணம்மா" என அவள் முகம் பற்றி திருப்பினான்

அவனின் பாவமான பார்வையில் சற்று மனம் நெகிழ "அப்ப நான் சொல்றத கேளுங்க... உங்களுக்கும் ஒரு சேன்ஜ் வேணும்... ப்ரீத்தியும் என்ஜாய் பண்ணுவா... இந்தியா போயிட்டு வரலாம் ப்ளீஸ்"

"எனக்கும் ஆசையா தான் இருக்கு செல்வி... ஆனா ஆபீஸ்..."

"ஆபீஸ் எப்பவும் தான்பா இருக்கு... நாம இப்படியே இருந்தா ப்ரீத்திக்கு நம்ம உறவு ஜனம், பேச்சுவழக்கு, கலாச்சாரம் எல்லாமும் அந்நியமாய்டும்னு பயமா இருக்குப்பா...ப்ளீஸ்" என கெஞ்சல் பார்வை பார்க்க,  அவள் கூற்றில் இருந்த நியாயமும் மனதில் பட, அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய்

"ஒகே... நீ சொல்றத நான் செய்ய முயற்சி பண்றேன்... அதுக்கு முன்னாடி நான் சொல்றத நீ செய்யணும்" என குறும்பாய் கண் சிமிட்டினான்

"என்ன?" என பதில் தெரிந்தே கேள்வி கேட்டாள் அவன் மனைவி

"அதான் கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டியே... கொஞ்சரதானு...அதை செய்" என சிரித்தான்

"ம்...மொதல்ல நான் சொன்னத நீங்க செய்ங்க... அப்புறம் நீங்க சொல்றத நான் செய்யறேன்... சரியா?" என அவன் தாடையை பற்றி கேலியாய் கூறினாள்

"ராட்சசி...." என அவளை பற்றி இருந்த பிடியை மேலும் இறுக்கினான்

                                        **************************************

சொந்த மண்ணில் கால் பட்டதும் ஒரு நாள் முழுக்க விமானத்தில் பயணம் செய்த அலுப்பு கூட பறந்து போனது சங்கருக்கு. இந்த பயணம் தன் வாழ்வையே திசை திருப்ப போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை

சொந்த ஊரை ரசிக்கும் ஆவலில் டாக்ஸி டிரைவரிடம் சற்று மெதுவாய் செல்லுமாறு பணித்தான்

அறுப்புக்கு காத்திருக்கும் பச்சை பசேல் வயல் வெளியும்...
பாசாங்கற்ற மனிதர்களின் முகமும்...
சிலு சிலுவென்ற காற்றும்...
தென்றலின் இசைக்கேற்ப நடனமாடும் மங்கை போல் தலை அசைக்கும் தென்னை மரங்களும்...
மடை நீரில் நடை பயிலும் நாரைகளும்...
வேட்டியை மடித்து கட்டி வரப்பில் எட்டி நடை போடும் உழைப்பாளிகளும்...
கண்டாங்கி சேலை முடிந்து தூக்கு சட்டி கையில் தொங்க கதை பேசி செல்லும் பெண்கள் கூட்டமும்...
ம்ம்மா என குரல் கொடுத்து தன் பசி உரைக்கும் கோமாதாவின் குரலும்...
கழுத்து மணி ஒலிக்க அவர்களின் முன் சென்று  கொண்டிருந்த  ரெட்டை  மாட்டு வண்டியும்...
செம்மண் குழைத்த வீடுகளும்...
சாணி மெழுகிய திண்ணைகளும்...
வாசல் கோலத்தில் நிறைந்த சாணி பிள்ளையார்கள் மேல் பூத்திருந்த பூசணிப் பூக்களும்...
பொங்கலுக்கென வெள்ளை சாயம் பூசி இருந்த தெருக்களும்...
தூரத்தில் ஒலித்த கோவில் மணி ஓசையும்...
நகரின் பரபரப்பற்ற சூழ்நிலையும்...பார்க்க பார்க்க தெவிட்டவில்லை சங்கருக்கு
செல்வி கூட தான் படித்த பள்ளி இது, விளையாடிய இடம் இது, தோழியின் வீடு இது என மகளிடம் சிறு பிள்ளை போல் குதூகலமாய் கூறி கொண்டே வந்தாள். ஆம், அவளும் அதே ஊரை சேர்ந்தவள் தான். சங்கரின் சொந்த அத்தை மகள் தான்

ப்ரீத்திக்கு எல்லாமே புதியதாய் தோன்றியது, உற்சாகமாய் கேள்வி கேட்டு கொண்டே வந்தாள். மூன்று ஆண்டுக்கு முன் வந்தபோது பார்த்த போதும், சிறு பிள்ளை என்பதால் அவளுக்கு நினைவில் பதியவில்லை

வீட்டின் முன் டாக்ஸி நின்றதும் வயதை மறந்து ஓடி வந்த அன்னையை கண்டதும் தன்னையும் அறியாமல் கண் பனித்தது சங்கருக்கு

"ராசா... சங்கரு... வந்துட்டியாப்பா? வா மருமகளே... ஆத்தி என்ன பெத்த ஆத்தி" என பேத்தியை முத்தத்தால் குளிப்பாட்டினாள் சரஸ்வதி, சங்கரின் அன்னை

சற்று மிரண்டு விலகிய மகளிடம் "ஏய் ப்ரீத்தி... அப்பத்தா டா...உன் அப்பத்தா" என்றான் சங்கர்

"அம்மா எப்படிமா இருக்கீக... மேலுக்கெல்லாம் சொகந்தான" தாயை கண்டதும் தாய் மண்ணின் பாஷை தானாய் வந்து ஒட்டி கொண்டது சங்கருக்கு

"எனக்கென்ன ராசா... சொகமா இருக்கேன்... நீ தான் முன்னைக்கு இப்ப இளச்சாப்ல இருக்க" என மகனின் தலை கோதினாள் பெற்றவள்

அந்த உயிர்ப்புள்ள காட்சி செல்வியின் கண்களை நிறைத்தது. தோளுக்கு மேல் வளர்ந்தாலும் என்ன, அன்னைக்கு என்றும் பிள்ளை தானே என தோன்றியது அந்த கணம்

அதற்குள் அவர்கள் வந்த சேதி அறிந்து சூழ்ந்து கொண்ட சங்கரின் தந்தையும், செல்வி வீட்டு ஜனமும், அக்கம் பக்க உறவுகளும் என அந்த இடமே உணர்ச்சிமயமாய் ஆனது

பின்பு உணவும் ஓய்வும் ஆனதும் வயலை காண மனைவி மகள் சகிதம், தந்தையையும் அழைத்து கொண்டு சென்றான் சங்கர்

"நம்ம ஊரு மாறவே இல்லீங்கப்பா..." என மகன் கூற

"ஆமாங்கண்ணு... மாத்தமில்லாத வர மாசில்ல...என்ன நான் சொல்றது" என தந்தை சிரித்தார்

"உண்ம தானுங்கப்பா"என ஆமோதித்தான் சங்கர்

வயலின் நடுவில் சென்று நின்றதும் பிரபஞ்சமே சொந்தமானது போல் உணர்ந்தான் சங்கர். ஒரு நாள் கூட இந்த உணர்வை அவன் வாழும் நகரத்தில் அனுபவத்ததில்லை என்பது உறைத்தது

"என்ன ராசா ரோசன... எந்த கோட்டைய புடிக்க" என தந்தை கேலியாய் கேட்க

"நெல் அறுப்பு எப்பங்கப்பா" என அதை பார்க்கும் ஆவல் கண்ணில் மின்ன கேட்டான் சங்கர்

"நம்முளுது சேத்து வயல் நேரடி வெதப்பு தான கண்ணு, ஐ.ஆர்.இருவது ரகம், இனி தான்... நோம்பி கழிஞ்சு அறுப்பு"

இது என்ன அது என்ன என கேள்வி கேட்ட மகளுக்கும் பதில் கூறி கொண்டே வந்தான் சங்கர்

செல்விக்கு, தான் இப்போது காணும் சங்கரும் பரபரப்பாய் சுழலும் கலிபோர்னியா சங்கரும் வேறு வேறு ஆளோ என தோன்ற ஆச்சிர்யமாய் கணவனை ரசித்தபடி வந்தாள். அவனை இத்தனை சந்தோசமாய் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதென தோன்றியது அவளுக்கு

ஊருக்குள் ஒரு சுற்று வரும் ஆவலில் தந்தையிடம் கூறி விட்டு மனைவி மகளை அழைத்து கொண்டு எட்டி நடை போட்டான் சங்கர்

கண்களை இடுக்கி பார்த்த ஒரு முதியவள் "ஆறது... நம்ம சரஸ்வதி மகன் சங்கரபாண்டியா... ராசா வந்துட்டியா? உங்காத்தா நீ வாரேன்னு ஊர் பூரா தண்டோரா அடிக்காத கொறதேன்...உன்ர பொண்டாட்டியா... அன்னிக்கி பாத்த மேனிக்கி அப்படியே இருக்கற போ... உன்ர மகளா இது... ஏன் இப்படி எலும்பும் தோலுமா இருக்குது புள்ள" என பொக்கை வாய் விரிய வெற்றிலை காவி படித்த ஈறுகள் ஜொலிக்க சிரித்தாள்

தன் முழுப்பெயர் சங்கரபாண்டி என்பதையே மறந்து போயிருந்த சங்கர் ஒரு கணம் பேச இயலாமல் நின்றான்

"ஆமாத்தா... சரஸ்வதி மகன் சங்கரபாண்டி தான்... சொகமா இருக்கீகளா?" என நேசமாய் முதியவளின் அருகில் திண்ணையில் அமர்ந்தான்

"இருக்கறன் ராசா... காடு வா வா ங்குது... வீடு போ போ ங்குது" என கூறியவளை இடை மறித்தது ஒரு குரல்

"சங்கரபாண்டி... நீ பொறந்த காலத்துல இருந்தே ஆத்தா இதத்தேன் சொல்லிக்கிட்டு கெடக்கு... காடும் வாங்கராப்ல காணோம்... வீடும் போங்கராப்ல இல்ல" என முதியவளின் மருமகள் சுந்தரி சிரிக்க முதியவள் கோபமாய் முகம் திருப்பினாள்

"ஹா ஹா... சொகமாங் அத்த... எங்க மச்சான்க ஆராயும் காணல" என வீட்டின் உள்நோக்கி பார்த்தான் சங்கர்

"நம்முளுது கரும்பு காடு தான ராசா... இப்பத்தான கிராக்கி கரும்புக்கு... சொசைட்டிக்கு போய் இருக்காக அல்லாரும்... வர்ற நேரந்தான்... இரு கண்ணு காப்பி தண்ணி எடுத்துட்டு வாறன்... உள்ள வா செல்வி... வா குட்டி பொண்ணே, அப்படியே அப்பன உரிச்சு வெச்சுருக்கா உன்ர மக...வா கண்ணு" என சுந்தரி உரிமையாய் அழைக்க

"இல்லீங் பெரிம்மா... பின்ன வாறம்... சும்மா அப்படியே ஊர ஒரு சுத்து பாக்கலாமுன்னு காலாற வந்தோம்" என செல்வி கூற

"அதுவுன்செரிதேன் சாவுகாசமா ஒருவேள சோருங்கராப்ல வாங்க கண்ணு" என கிராமத்து பாசம் மிளிர கூறினார் சுந்தரி

அதற்குள் ப்ரீத்தி தன் அன்னையின் காதில் ரகசியமாய் ஏதோ கேட்க "என்ன கேக்குது புள்ள?" என முதியவள் விசாரிக்க

"உங்க காதுல ஏன் இவ்ளோ பெரிய ஓட்டைனு கேக்கறா ஆத்தா" என சிரித்தாள் செல்வி

"அதுவா... இங்க வா சொல்லுறன்" என ப்ரீத்தியை அருகில் இருத்தி கொண்டவள் "அது... என்ற ராசா... அதான் என்ற புருஷன், என்ன கண்ணாலம் கட்டினப்ப பத்து பவுணுல தண்டட்டி போட்டாக... ஊரே மூக்குல வெரல வெச்சு பாத்தது... அந்த தண்டட்டி போட்டுதேன் காது இப்படி ஆகி போச்சு... அது சரி... பட்டணத்து சிங்காரி உனக்கென்ன தெரியும் தண்டட்டியும் அட்டிகையும்" என மீண்டும் பொக்கை வாய் சிரித்தது

அவள் கூரியதெதுவும் புரியாத போதும், ஏதோ மியூசியத்தில் அதிசியத்தை பார்ப்பதை போல் அந்த முதியவளை ரசித்தாள் ப்ரீத்தி. தனக்கும் முதியவளின் சிரிப்பு தொற்றிக்கொள்ள வாய் பொத்தி சிரித்தாள் ப்ரீத்தி

இளமையும் முதுமையும் சங்கமித்த அந்த காட்சியை படம் பிடிக்க இயலவில்லையே என வருந்தினான் சங்கர். இன்னும் கேமரா எதையும் பெட்டியைவிட்டே எடுக்கவில்லையே

அவர்களிடம் விடைபெற்று ஊர் மத்தியில் இருந்த கோவில் நோக்கி சென்றனர் மூவரும்

அன்று காப்பு கட்டு நாளுக்கு மும்முரமாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தன கோவிலில். சங்கரை பார்த்ததும் எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்

"அடடே... சங்கரு... நீ வாரன்னு ஆத்தா சொல்லிச்சு... எப்படி மச்சான் இருக்க? வா தங்கச்சி... புள்ள அப்படியே சங்கரு தான்" என்ற சங்கரின் சிறு வயது தோழன் முத்து, ப்ரீத்தியை ஆசையாய் தூக்கி கொண்டான்

"நல்லா இருக்கேண்டா முத்து... நீ எப்படி? தங்கச்சி புள்ளைக எல்லாம்?"

"அல்லாரும் சொகந்தான்... அவ ஆத்தா ஊட்டுல இருக்கா.. மூணாவது பொம்பள புள்ள... ரெண்டு மாசந்தான் ஆச்சு.. ஆத்தா சொல்லுச்சா?" என ஆவலாய் கேட்டான் முத்து

"அப்படியா? ரெண்டும் ஆம்பள புள்ளயா போச்சுன்னு நீ பொலம்பின நான் போன வாட்டி வந்தப்ப... ரெம்ப சந்தோஷம் முத்து... இன்னும் அம்மாகிட்ட உக்காந்து பேசவே இல்ல முத்து" என்றான் சங்கர்

"சரிப்பா... நோம்பி கழிஞ்சு நாளமத்தன நம்ம ஊட்டுக்கு ஒரு வா கரி சோறு உங்கராப்ல வா... தங்கச்சி, இவன் மறந்தாலும் நீ கூட்டிட்டு வாற... சரி தான" என உரிமையாய் செல்வியிடம் கூறினான் முத்து

"கண்டிப்பா வாரமுண்ணா" என்றாள் செல்வி அந்த அன்பில் நெகிழ்ந்தவளாய்

இப்படியாய் சிறு வயது தோழர்களையும், தூக்கி வளர்த்த உறவுகளையும் திகட்டாமல் பார்த்தும் பேசியும் அந்த நாள் கழிந்தது

                                        **************************************

சங்கரின் வீட்டில் அவன் வசதிக்கென கட்டப்பட்டிருந்த காரை மச்சு அறையில் (மாடி ரூம்) செல்வியுடன் பௌர்ணமி நெருங்கும் நிலவை ரசித்து கொண்டிருந்தான் சங்கர்

மனம் நிறைவாய் இருந்தது இருவருக்கும். சுற்றிய அலுப்பில் ப்ரீத்தி உறங்கி இருக்க, கணவனும் மனைவியும் கதை பேசி கொண்டிருந்தனர்

"என்ன தான் சொல்லுங்க... நம்மூரு நம்மூரு தான் இல்லியா?" என செல்வி கேட்க

"நிச்சியமா... அம்மா மடில படுத்து தூங்கற சுகம் தான் செல்வி இது" என மனைவியின் கன்னத்தில் செல்லமாய்  தட்டினான்

"ஆமாம்பா... நம்ம ப்ரீத்தி என்ன சொன்னா தெரியுமா கொஞ்சம் முன்னாடி... நாம இங்கயே இருந்துக்கலாம் மம்மி... இங்க வந்ததுல இருந்து டாடி என் கூடவே இருக்காரு... திட்டவே இல்ல... நெறய பேரு இருக்காங்க... அப்பத்தா எனக்கு கதை எல்லாம் சொன்னாங்க... அப்பிச்சி கரும்பு உரிச்சு குடுத்தாங்க... ஜாலியா இருக்கு மம்மினு சொல்றா. அவ சொல்றது நடந்தா சொகந்தான்" என பெருமூச்சு விட்டாள் செல்வி

"ஏய்... இது ப்ரீத்தி ஆசையா இல்ல என் பொண்டாட்டி ஆசையா... உண்மைய சொல்லு..." என மனைவியை சீண்டினான் சங்கர்

"எனக்கும் ஆச தான்... நெனச்சா ஆத்தா ஊட்டுக்கு போலாம்... அக்கா தங்கச்சிய பாக்கலாம்... நல்லது கெட்டதுல கலந்துக்கலாம்... ஊரும் உறவுமா வாழுற வாழ்க்கை சுகந்தானேப்பா....ஏன் உங்களுக்கு இல்லையா ஆச? வந்ததுல இருக்கு பாத்துட்டு தானே இருக்கேன்... ஐயா மொகத்துல நூறு வாட்ஸ் பல்பில்ல எரியுது" என மனைவி சீண்டுவது போல் கூற

"ஏய்... நீ இப்படி நம்ம பேச்சு வழக்குல பேசிக் கேட்டு எம்புட்டு நாளச்சு செல்வி... கல்யாணத்துக்கு முன்ன பேசின என் மொற பொண்ணு செல்வி முன்னாடி நிக்கராப்ல இருக்குடி" என மனைவியை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்

திருமணத்திற்கு முந்திய நாட்களை பற்றி பேசியதும் செல்வி வெட்கத்தில் முகம் சிவக்க "போங்க மாமா" என கணவனின் தோளில் முகம் புதைத்தாள்

"ஏய்... நீ என்ன மாமான்னு கூப்ட்டு எத்தன நாளாச்சுடி" என அவளை மேலும் சிவக்க வைத்தான்

"என்ன வம்பு பண்ணினது போதும்... நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல" என பேச்சை மாற்றினாள்

"என்ன?" என வேண்டுமென்றே அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில் அவன் கேட்க

"இங்கயே இருந்துரலாமா?" என ஆசையாய் கேட்ட மனைவியை பாவமாய் பார்த்தான்

வளர்ந்து செழித்த நாற்றை பிடுங்கி நட்டது போல் அவள் கொண்டாடும் ஊரில் இருந்து பிரித்து சென்று விட்டோமே என முதல் முறையாய் வருந்தினான்

"என்ன மாமா...? பேச்சே வர்ல"

"நீ மாமான்னு கூப்படற அழகுல மயங்கி நிக்கறேண்டி" என்றான்

"ச்சு... பதில் சொல்லுங்க" என சிணுங்கினாள்

"என்ன சொல்ல? நடக்கறதா பேசு செல்வி"

"ஏன் நடக்காது?"

"ஏய்... விளையாடறயா? எனக்கு நாத்து நடறதோ... களை எடுக்கறதோ என்ன தெரியும் சொல்லு... இங்க இருந்து என்னடி செய்யறது?"

"ஏன் மாமா? இங்க இருக்கறவக யாரும் பொழக்கிலியா? உங்க பிரெண்ட் முத்து அண்ணன் படிச்சுட்டு ரைஸ் மில்லு வெக்கலையா இங்கயே... இன்னிக்கி பாத்தோமே சுந்தரி பெரியம்மா... அவங்க மகன் கூட அடுத்த வெதப்புக்கு அப்பறம் சுகர் மில்லு ஆரம்பிக்க போறதா அத்த சொல்லிட்டு இருந்தாக"

"ஓ... மாமியாரும் மருமகளும் சேந்து தான் அட்டாக் பண்றீங்களா?" என சிரித்தான்

"இல்லப்பா... பேச்சு வாக்குல அத்த சொன்னதுதேன்... இங்கயே நாமளும் எதுனா தொழில் பண்ணிக்கலாமேப்பா" என கெஞ்சலாய் பார்த்தாள்

"செல்வி செல்லம்... அமெரிக்க வாழ்க்கைக்கு பழகின நமக்கு இது கொஞ்ச நாளுல சலிச்சுடும்மா... அந்த வசதி வாய்ப்ப மனசு எதிர்பார்க்கும்... அது மட்டுமில்ல ப்ரீத்தி படிப்பப்பத்தி யோசிச்சு பேசு"

"இங்க பாருங்க மாமா... மனமிருந்தா மார்கமுண்டு... என்ன பெரிய அமெரிக்கா பேரிக்கானு? இந்த மண்ணுல தான பொறந்து வளந்தோம்... அந்த வசதி வாய்ப்பெல்லாம் வெறும் வெளிப்பூச்சு தா... இன்னும் சரியா சொல்லணும்னா அனல் மேல இருக்கற பனித்துளி போல, அதுக்கு என்ன ஆயுசு சொல்லுங்க... ஒரு நொடில அனல்ல பனித்துளி கரைஞ்சு போறாப்ல அற்ப ஆயுசு சுகம் தான் அதெல்லாம்... இதான்ப்பா நம்ம இடம்.... ப்ரீத்தி ஸ்கூல் பத்தி என்ன... இப்ப பக்கத்து டவுன்லையே நல்ல நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கு தெரியுமா?" என்ற மனைவியின் கூற்றில் இருந்த உண்மை சாட்டியடியாய் மனதில் விழ சற்று நேரம் அமைதியாய் சிந்தித்தான்

அவனுக்கும் கூட ஊரில் வந்து இறங்கியதில் இருந்து இதே சிந்தனையாய் தான் இருந்தது. அதிலும் வயோதிகம் நெருங்கும் பெற்றோரின் முகம் வேறு கண் முன் வந்து பயம் காட்டியது

இன்னும் எத்தன தான் சம்பாதிச்சாலும் தாய் மண்ணின் சுகத்திற்கு ஈடாகுமா? இங்கு காலூன்ற வேண்டிய மட்டும் தான் சம்பாதிதாயிற்றே. இன்னும் ஏன் அங்கு இருக்க வேண்டும்? என பல கேள்விகள் சங்கரின் மனதில் ஓடி கொண்டே இருந்தன

"ம்...சொல்லுங்க" என செல்வி மீண்டும் கேட்க

"ம்... நல்லா ஸ்கூல் விசயம் எல்லாம் கூட விசாரிச்சுட்டு தான் பேசறீங்களா அம்மணி?" என கேலி செய்தான்

"இன்னும் நீங்க பதில் சொல்லல மாமா" என்றாள் அதிலேயே குறியாய்

சற்று நேரம் எதுவும் பேசாமல் பல விசயங்களையும் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் "இப்படி மாமான்னு ஆசையா என் பொண்டாட்டி கேட்டா மாட்டேன்னு எப்படிடி சொல்ல" என சங்கர் குறும்பு சிரிப்புடன் கூற

"நெசமாவா?" என ஆனந்தத்தில் கணவனை கட்டிக்கொண்டாள் செல்வி

"செல்வி... உடனே இங்க வந்துற முடியாது. போய் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு ப்ரீத்தி ஸ்கூல் இயர் முடிஞ்சப்புறம் வருவோம் சரியா?"

"போதும் மாமா... நீங்க வர ஒத்துகிட்டதே போதும்" என அவள் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது
 
""செல்வி... ஆனா பின்னாடி நீ இந்த முடிவ நெனச்சு எப்பவும் வருந்தமாட்டியே?" என சங்கர் கேள்வியாய் நோக்க

"எனக்கென்ன பைத்தியமா?" என  கோபமாய் பார்த்தாள். கோபத்திலும்  ஜொலித்த மனைவியின் அழகிய முகத்தை ரசித்தவன்,

"இல்லையா பின்ன... என் மேல பைத்தியமா கட்டுனா மாமனத்தான் கட்டுவேன்னு நிக்கல" என பழைய கதையை கூறி கேலி செய்ய

"சீ.... போங்க மாமா... உங்களுக்கு எப்பவும் கேலி தான்..." என மனம் நிறைந்த சந்தோசத்தில் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் செல்வி

காலையில் தன் பெற்றவர்களிடம் இந்த முடிவை கூறி அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்வை காணும் ஆவல் அப்போதே சங்கரின் நெஞ்சில் ஊற்றாய் பொங்கியது

தை பிறந்தது... அவர்கள் வாழ்வில் வழியும் பிறந்தது....

நமக்கும் ஒரு நாள் விடியும் என்ற கனவோடு
"பொங்கலோ பொங்கல்...."
"பொங்கலோ பொங்கல்...."
"பொங்கலோ பொங்கல்...."

மூணுகல்லு முட்டுகுடுத்து
மூணுபடி அரிசிபோட்டு
கும்மிபொங்கல் வெச்சசுகம்
குக்கர்பொங்கல் தந்திடுமா!!!

பின் குறிப்பு:
இந்த கதைல வந்த முடிவு எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம்னு இதை படிக்கற பலருக்கும் தோணும். ஆனா நிஜத்துல நிறைவேறாத கனவை என் கதைலயாச்சும் செய்வோம்னு ஒரு ஆசைல தான் இப்படி எழுதினேன்

இது வரை பொறுமையா படிச்ச உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!


(முற்றும்...)
...

63 பேரு சொல்லி இருக்காக:

முனியாண்டி said...

100 க்கு வாழ்த்துக்கள்
I will put my comments after reading

Vijay said...

கதை ரொம்பவே நல்லா இருந்தது .. கொஞ்சம் நீளம் , மத்தபடி கிராமத்து அழகை ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க .. வாழ்த்துக்கள் ..

Porkodi (பொற்கொடி) said...

வாழ்த்துக்கள் அப்பாவி! சிறுகதையே சிறு கவிதை தான், அது தவிர ஒரு சிறு கவிதை வேறயா! ;) (நானும் 5 வருசத்துல 80 பதிவு தான் வந்துருக்கும் நினைக்கறேன்.. அவ்வ்வ்வ்)

தோழி பிரஷா said...

100 க்கு வாழ்த்துக்கள் அத்துடன்
பொங்கல் வாழ்த்துக்களும்..

Ramani said...

100 க்கு வாழ்த்துக்கள்
.நல்ல நேரத்தில் ஒரு நல்ல கதை.
மூணு கல்லு வச்சு செஞ்சா
அதுதான் பொங்கல்
குக்கர் வச்சு செஞ்சா
அதன் பேர் சமையல்

S.Menaga said...

100 க்கும்,பொங்கல் வாழ்த்துக்களும்...கதை நல்லாடிருக்குங்க....

ηίαפּάʞиίнτ ™ said...

100 க்கு வாழ்த்துக்கள் அத்துடன்
பொங்கல் வாழ்த்துக்களும்..

ப்ரீத்தி ஆங்கிலம் பேசாதது வியப்புதான்.

எல் கே said...

நூறுக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் உன் ஆசை பூர்த்தி அடையவும் வாழ்த்துக்கள்

முனியாண்டி said...

கதை படிக்கும்போது என்னை என் கிராமத்திற்கு கூட்டிச் சென்று என்னையும் சிறிது ஏங்க வைத்து விட்டிர்கள். கோவை மொழி எனக்கு (மதுரைக்கு) சிறிது புதுசு படிக்கதான் கொஞ்சம் சிரமப்பட்டேன்.

பத்மநாபன் said...

முதலில் நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள்..பெயருக்கு நூறு என்றில்லாமல் , நூறை பிரித்தால் ஆயிரம் வருமளவுக்கு வளமான `` நூறுக்கள் `` இதே உற்சாகத்தோடு ஐநூறு ,ஆயிரங்களை எட்ட வாழ்த்துக்கள்..
``அனல் மேல் பனித்துளி`` நல்ல ஓட்டமான கதை... இது போல் முடிவு சாத்தியமில்லை என சொல்ல முடியாது... ஒரு நிறைவு நிலையில், நம்ம நாட்டுக்கு எதாவது செய்வோம்ங்கற மன நிலை வந்தால் போதும் .. (அதுக்கு நம்ம அரசியலும் ஒத்துழைக்கனும் )

மேலுக்கு, சோறுங்கறது , என கொங்குத்தமிழ் நன்றாகத்தானே வந்திருந்தது .. கொங்கு பாசை கொஞ்ச கொஞ்ச வித்தியாசத்தோடு ஊரு ஊருக்கு மாறும்... பொள்ளாச்சி.. பல்லடம் பெல்ட் அதில் முதலிடம்....

நானெல்லாம் நூறு பின்னூட்டம் போடுவனான்னு தெரியாது...அதுக்கெல்லா ஒரு `நிது` வேணும்.... ( நிது..எதுன்னு சொல்லாமல் சொல்லும் கோவைத்தமிழ் )

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கமணி, எத்தனையோ அமெரிக்கா வாழும் பெண்களின் ஏக்கம் ஒருபக்கம். அந்த வாழ்க்கையை விட்டு வரமுடியாத ஆண்களின் சங்கடம்.
எப்படியோ கற்பனையில் கிடைத்தாலாவது சந்தோஷம் தான்.
அன்பு வாழ்த்துகள் மா.
நூற்றுக்கும் தான்.:)

sultanonline said...

உங்களுடைய 100 வது பதிவில் அதுவும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் வாழ ஏங்கும் ஏக்கத்தை அழகாக சொல்லியிருக்கிறீங்க. இது உங்க சொந்த ஆசையா? உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.. மற்றும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்....

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

BalajiVenkat said...

Tears In My eyes.... Cant explain it words what I feel now...

சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா .... 

And congrats for the ton....

அமைதிச்சாரல் said...

அருமையான கதை அப்பாவி, சொந்த மண்ணில் வாழணும்கற ஏக்கம் அப்படியே இழையோடுது..

100-க்கும், பொங்கலுக்கும் வாழ்த்துக்கள்.

Porkodi (பொற்கொடி) said...

//Tears In My eyes.... Cant explain it words what I feel now... //

அடக்கடவுளே.. இப்படி ஒரு ட்விஸ்டை அப்பாவியே எதிர்ப்பார்த்து இருக்க மாட்டங்களே! கண்ணை தொடச்சுக்குங்க சார்!

யாதவன் said...

100 க்கு வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்களும்..

வெங்கட் நாகராஜ் said...

100-க்கு வாழ்த்துக்கள். நல்ல கதை. நிஜத்தில் நடந்தால் நிறைய பேர் சந்தோஷப் படுவார்கள் ஆனால் நடப்பது தான் இல்லை.... :(

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப பெருசு மக்கா....

Mahi said...

புவனா,சும்மா சொல்லக்கூடாது,நெசமாலுமே ஒரு விக்ரமன் படம் பாத்த எபெக்ட்டை கொண்டுவந்துட்டீங்க போங்க!
க்ளைமாக்ஸ்ல பாட்டும் பாடிட்டீங்க,பேக்ரவுண்டு மீசிக் மட்டும்தான் இல்ல,அதுக்குதான் நாங்கள்லாம் கமெண்ட்(மீசிக்) போட வந்திருக்கோம்!:):):)

நடைமுறை சிக்கல்களை எல்லாம் அழகா ஒதுக்கி,பாஸிட்டிவ் சைடை மட்டும் காட்டிட்டீங்க! சிக்கல்கள் இருந்தாலும்,நம் வேர்கள் அங்கேதான்,அதிலே எந்த மாற்றமுமில்லை! மனமிருந்தால் மார்க்கமுண்டு..காணி நிலம் வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு! பர்ப்போம்,நம் கனவெல்லாம் நனவாகுதா என்று!

பொங்கல் வாழ்த்துக்கள்!முதல் சதத்துக்கும் வாழ்த்துக்கள் புவனா!

vinu said...

as usal story is rocking; naanum 100*; ippa ellam namboda vootu pakkam neengo varathillaingooooo

siva said...

"விடிய vidiya ப்ளாக் படிச்சி அது அப்பாவி ப்ளாக் பொங்கல் "
கமெண்ட் கமெண்ட்எ போட்டு வச்ச அது கம்மெண்டு பொங்கல் .."

"ஆடுங்கடா என்னை சுத்தி...

வாழ்த்துக்கள்

நூறாவது பதிவுக்கு ..

"பதிவு உலக மேக் மெகா கதை ஆசிரியர் விருது வழங்கபடுகிறது "அத்துடன் தக்க சன்மானம் ரூபாய் இருபத்து ஐந்தாயிரமும் வழங்கபடுகிறது."

RVS said...

நூறுக்கு வாழ்த்தை பிடிங்க முதல்ல...

//மடை நீரில் நடை பயிலும் நாரைகளும்...//
அடாடா.. கவித..கவித....

நல்ல கதை.. வட்டார வழக்கு சொற்கள் வச்சு எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் நல்லா பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. ;-)

கல்பனா said...

ரொம்ப எதார்த்தம இருக்கு
அருமை
ஆனா பனித்துளியும் சங்கரும் சேத்து பாத்த கதையில் பனித்துளி ஷங்கர் வலம் வருகிறார்

சுபத்ரா said...

100-வது பதிவிற்கு வாழ்த்துகள்...! பொங்கல் நல்வாழ்த்துகள்...! கதை நன்றாக இருந்தது..

கோவை2தில்லி said...

நூறுக்கு வாழ்த்துக்கள். நம்மூர் தமிழ் படித்து மகிழ்ந்தேன். சொந்த ஊரில் செட்டிலாவது நடைமுறையில் சிறிது கடினம் என்றாலும் ஓய்வு காலத்தில் முயற்சி செய்யலாம். தலைப்பு பிரமாதம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

parvathapriya said...

நல்ல பதிவுங்க புவனா! 100 க்கு வாழ்த்துக்கள் !

கதை நன்றாக, மனதில் பதியும் விதமாக உள்ளது.,
இந்த மாதிரி நல்ல கதைகளை எழுதி எங்களை போன்ற வாசகிகளின் மனதில் நீங்கா
இடம் பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

ஒரு நல்ல கதை என்பது படிப்பவர்களை ஆளுமை படுத்த வேண்டும் என்று படித்து இருக்கிறேன்
அது இங்கே நடந்து இருக்கிறது!

செல்வி பாத்திரம்,பேசிய விதம் ,நடை ,உடை ,பாவனை ஏனோ உங்களை நினைவு ஊட்டுகின்றன .,
உங்களை நேரில் பார்த்த தில்லை தான் .,இருந்தால் நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது
உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே எப்போதுமே நன்றாக தான் நடக்கும் புவனா !

பொங்கல் வாழ்த்துக்கு நன்றி ! தங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

கோவை ஆவி said...

நூறுக்கு வாழ்த்துகள்.

//நிஜத்துல நிறைவேறாத கனவை என் கதைலயாச்சும் செய்வோம்னு//

என்னங்க அம்மணி, ஊருக்கு போயிட்டு வந்து சித்த நாள் கூட ஆகல, அதுக்குள்ள ஊர் ஞாபகம் வந்துருச்சுங்களாக்கும்?
நீங்க சொன்னதென்னவோ சரிதானுங்க அம்மணி, பானையில பொங்கல் செஞ்சு தலைவாழ எல போட்டு கையில எடுத்து சாப்புடறதுக்கும் குக்கர்ல செஞ்சு தட்டுல போட்டு ஸ்பூன்ல சாப்பிடறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்குதுங்கோவ்!! ரொம்ப அருமையா சொல்லிபுட்டீங்க!!
பொங்கல் வாழ்த்துகள் அம்மணி!!

வெறும்பய said...

நல்ல கதை...

நூறுக்கு வாழ்த்துக்கள்... அத்துடன் பொங்கல் வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்...

Krishnaveni said...

congrats on your 100th post, kongu thamilla sirukathai super, happy pongal

தக்குடு said...

ரொம்ப நன்னா இருந்தது அக்கா, சங்கரபாண்டி குடும்பத்தோடையே வாசகனும் நகர்ந்து காட்சிகளை பார்க்கும் விதமாக அமைந்த நடையும், இடையில் எடுத்தாண்ட வார்த்தை ஜாலங்களும் ரசிக்க வைத்தது. கனடாவை கலிபோர்னியாவாக மாற்றி தனது ஏக்கத்தை வெளிப்படுத்திய விதத்தில் படைப்பாளியான கதாசிரியரின் மனவோட்டம் தெளிவாக தெரிகிறது.

எண்ணிக்கையில் மட்டும் நூறாக இல்லாமல் எண்ண வளத்திலும் ஆறாய் பாயும் சிறுவாணிக்கார பெண்மணியை எண்ணை வள தேசத்திலிருந்து நான் துதிக்கும் சிறு வாணி ஆசிர்வதிப்பாளாக!

அன்புடன்,
தக்குடு

Mahi said...

//எண்ணிக்கையில் மட்டும் நூறாக இல்லாமல் எண்ண வளத்திலும் ஆறாய் பாயும் சிறுவாணிக்கார பெண்மணியை எண்ணை வள தேசத்திலிருந்து நான் துதிக்கும் சிறு வாணி ஆசிர்வதிப்பாளாக!//அட,அட,அட!!!

'கலைவாணி நின்கருணை தேன்மழையே..விளையாடும் என் நாவில் செந்தமிழே!' மாதிரி தமிழ் துள்ளி விளையாடுதே தக்குடு?! கலக்கறே போ! :):)

sriram said...

நூறுக்கு வாழ்த்துக்கள் புவனா..
பொங்கல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மாதேவி said...

100-க்கு வாழ்த்துகள், தைப்பொங்கல் வாழ்த்துக்களும்.

middleclassmadhavi said...

100-வது பதிவிற்கு வாழ்த்துகள்! கதை அருமையாக இருந்தது.

priya.r said...

யோவ் அக்கா என்று பாசமா (!) அழைக்கும் என் தங்கை சுனாமி ச்சே சாரி அனாமி யின் சார்பா
100 க்கு வாழ்த்து !அவ்வளோ தான்.,
பின் குறிப்பு : என் சார்பா அவ வந்து சொல்லுவா !

ஆனந்தி.. said...

ஹாய்...தங்ஸ்...100 வது பதிவா...மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..:))

Guna said...

Congrats for 100. Nice Story

ஸ்ரீராம். said...

நிறைவான கதை...சாத்தியப் படுவதற்கும் சாத்தியப் படாததற்கும் சங்கர்களும் செல்விகளும் அவர்தம் மனங்களும்தான் பொறுப்பு. நூறுக்கு வாழ்த்துக்கள்.

vgr said...

AT,

Congrats on the 100th post. innum niraya ezhuda vazhthukkal.

vara vara neenga sun tv, zee tv mari ayiteenga...pongal sirappu nigazhchi, puthandu sirappu nigazhchi nu..:)

The fact about the "Mozhi nadai" in the story should be really appreciated. Well done on trying that.

Story vandu..pudiya jadiyil pazhaya urugai :) But ungal asai enbadal... niraivera vazhthukkal...selvi mari neengalum oriru murai "Mama" endrazhaithal nadanthidum :)

தோழி பிரஷா said...

100 க்கு வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்களும்..

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Vijay - நன்றிங்க விஜய்... கொஞ்சமில்ல ரெம்பவே நீளம்... ஆனா கத்திரி போட மனசு வரலை... பொறுமையா படிச்சதுக்கு ரெம்ப நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) -
//சிறுகதையே சிறு கவிதை தான், அது தவிர ஒரு சிறு கவிதை வேறயா! ;) //
நல்லாதானே போய்கிட்டு இருக்கு...ஏம்மா ஏன்? ஹ ஹ ஹ...

//நானும் 5 வருசத்துல 80 பதிவு தான் வந்துருக்கும் நினைக்கறேன்.. அவ்வ்வ்வ்//
நீங்கெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி... ஒரு பதிவு போட்டா 100 போட்டா மாதிரி... நான் இப்பதான் நூறு போட்டு ஒரு பதிவு கணக்குல வந்து நிக்கறேன்... (How is it????? ஹ ஹ ஹ)

அப்பாவி தங்கமணி said...

@ தோழி பிரஷா - ரெம்ப நன்றிங்க பிரஷா

@ Ramani - ரெம்ப நன்றிங்க...சரியா சொன்னீங்க...

@ S.Menaga - ரெம்ப தேங்க்ஸ் மேனகா...

அப்பாவி தங்கமணி said...

@ ηίαפּάʞиίнτ ™ - நன்றிங்க... இல்லைங்க இங்க உள்ள என் நட்பு வட்டத்தின் பிள்ளைகள் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை...அது பெற்றோரின் வளர்ப்பு முறையில் இருக்கிறதென நினைக்கிறேன்...

@ எல் கே - நன்றி பிரதர்

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க... thats a great compliment

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க அண்ணா... நூல் சம்பந்தபட்ட ஊர்க்காரர்னு (கோவை) நிரூபிச்சுட்டீங்க நூல் கவிதை பாடி... ஹ ஹ...

//அதுக்கு நம்ம அரசியலும் ஒத்துழைக்கனும்//
சரியா சொன்னீங்க...

//அதுக்கெல்லா ஒரு `நிது` வேணும்.... //
நிது எப்பவும் இருக்குங்க அண்ணா... சீக்கிரம் நூறு போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... அதோட பொங்கல் வாழ்த்துக்களும்

அப்பாவி தங்கமணி said...

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப தேங்க்ஸ்ங்க வல்லிம்மா...

@ sultanonline - என் ஆசையும் தான்... ரெம்ப நன்றிங்க

@ GEETHA ACHAL - ரெம்ப நன்றிங்க கீதா

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - ரெம்ப தேங்க்ஸ்ங்க பாலாஜி... thats a great compliment... made my day...

@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க அக்கா

@ //Porkodi (பொற்கொடி) சொன்னது… - அடக்கடவுளே.. இப்படி ஒரு ட்விஸ்டை அப்பாவியே எதிர்ப்பார்த்து இருக்க மாட்டங்களே! கண்ணை தொடச்சுக்குங்க சார்! //
ஹ ஹ ஹ... seeing your first comment I thought kalagakanmani touch is missing... happy to see here now... ha ha ha...

அப்பாவி தங்கமணி said...

@ யாதவன் - ரெம்ப நன்றிங்க யாதவன்

@ வெங்கட் நாகராஜ் - ஆமாங்க... நடக்கும்னு நம்புவோம்... மிக்க நன்றி

@ MANO நாஞ்சில் மனோ - எது பெருசு? கதையா ஆசையா? ரெண்டும் தான்னு நினைக்கிறேன்...ஹ ஹ... மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஹ ஹ... விக்ரமன் படமா... அது சரி... கமெண்ட்ஸ் background மீசிக்ஆ? சூப்பர்... எஸ் காணி நில கனவை தொடர்ந்து காண்போம்... தேங்க்ஸ் மகி

@ vinu - தேங்க்ஸ் வினு... ஆஹா... அடிக்கடி வரேன்னு உங்க ப்ளாக் பக்கம்...

@ siva - ஆஹா...பாட்டா? நடத்துங்க சிவா... என்னது விருதா? என்னாது பணமுமா? வரவே இல்ல.... இனி தான் அனுப்ப போறீங்களா? சரி சரி... சட்டு புட்டுன்னு அனுப்புங்க...நன்னிஹை... ஹ ஹ ஹ

அப்பாவி தங்கமணி said...

@ RVS - ரெம்ப நன்றிங்க

@ கல்பனா - தேங்க்ஸ் கல்பனா...ஆஹா எழுதின எனக்கே இதெல்லாம் தோணல... ஆனாலும் ரெம்ப யோசிக்கறீங்க... ஹ ஹ ஹ... தேங்க்ஸ் again

@ சுபத்ரா - ரெம்ப நன்றிங்க சுபத்ரா

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்ங்க

@ parvathapriya - தேங்க்ஸ் அக்கா... எல்லாம் உங்கள போல பிரெண்ட்ச குடுக்கற ஊக்கம் தான் டானிக்... செல்வி பாத்திரம் என்னை போலவா? கொஞ்சம் அப்படி சொல்லலாம் அக்கா... என்னை நேர்ல பாத்தப்புறமும் அதே சொல்றீங்களான்னு பாப்போம்... ஹ ஹ... தேங்க்ஸ் அக்கா

@ கோவை ஆவி - ஆஹா... காதுல தேன் வந்து பாயுது போங்க... தேங்க்ஸ் ஆனந்த்... நம்ம ஊரு தமிழ் கேக்கவே அழகா இருக்கு போங்க... இப்பத்தான் ஊருக்கு வந்துட்டு வந்தாலும் எப்பவும் ஊர் ஞாபகம் தான்... அப்படியே இருக்கேன்... ஹ்ம்ம்... மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... உங்களுக்கும் ஹாப்பி பொங்கல்

@ தக்குடு - அட அட அட... தமிழ் வெளையாடுதப்பா.... எப்படி எப்படி? சிறுவாணி சிறு வாணி... ச்சே ... சான்சே இல்ல தக்குடு... உன் தமிழ் புலமையை மெச்சி இன்னைக்கே உனக்கு ஒரு டசன் இட்லி பார்சல் அனுப்பப்படும்... ஹ ஹ அஹ... ஜோக்ஸ் அபார்ட்... தேங்க்ஸ் பிரதர்...

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - சூப்பர் கமெண்ட் மகி... (எனக்கு இந்த "கலைவாணி நின்கருணை" பாட்டு ரெம்ப பிடிக்கும்... ஸ்கூல்ல ஒரு வாட்டி இதை பாடி prize கூட வாங்கினேன்... அதெல்லாம் ஒரு காலம்...ஹ ஹ ஹ)

@ பாஸ்டன் sriram - என்னங்க ஸ்ரீராம் இது... சிறுகதைக்கும் template கமெண்ட்ஆ? நல்லா இல்ல... ஏதோ உங்கள போல மக்கள் படிபீங்கன்னு ஆர்வத்துல எழுதினா இப்படியா? ஹ்ம்ம்... ஒகே நாட்டாமை தீர்ப்பு சொல்றதுக்குள்ள மீ எஸ்கேப்... ஹ அஹ

@ மாதேவி - நன்றிங்க மாதேவி

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க

@ priya.r - அதென்ன ஒரு கமெண்ட் பர்வதபிரியானு வருது ஒரு கமெண்ட் priya.r ... ஹ்ம்ம்... டபுள் act ஆ? ஹ ஹ... ஒகே... அனாமிகாவுக்கு நீங்க proxy யா? accepted ...நல்ல காரியம் செய்ய போய் இருக்கா அனாமிகா... அதுவும் நல்லபடி நடக்க வாழ்த்துவோம்... (சந்தடி சாக்குல நீங்க அனாமிகாவை சுனாமினு சொன்னதை நான் சீக்ரட்ஆ வெச்சுக்கறேன்... ஒகே... ஹ ஹ)

@ ஆனந்தி.. - ரெம்ப நன்றிங்க ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ Guna - நன்றிங்க குணா

@ ஸ்ரீராம். - ரெம்ப அழகா சொன்னீங்க அண்ணா... நன்றி

@ vgr - ஹ ஹ... சன் டிவி ஜீ டிவி போலயா? அது சரி... அப்ப நெறைய விளம்பர இடைவேளை கூட போடணுமே? ஐடியாவுக்கு நன்னிஹை...ஹ ஹ... thanks for your appreciation & honest opinion too... கடசியா சொன்ன suggestion எல்லாம் ஒண்ணும் சூப்பர் தான்... ஆனா இங்க அந்த பப்பு எல்லாம் வேகாது சார்... ஹ ஹ அஹ... தேங்க்ஸ்...

@ தோழி பிரஷா - தேங்க்ஸ் பிரஷா

தங்கம்பழனி said...

100 - நூறாக வாழ்த்துக்கள்..

Mahi said...

புவனா,திண்ணை-ல உங்க கதை படிச்சேன்,நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்!

இதுதான் அங்கே முதல் கதையா,இல்லை நான் மிஸ் பண்ணிருக்கேனா? :)

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - Thanks Mahi... இதான் முதல் வாட்டி அனுப்பினேன் மகி... எப்பவும் அங்க படிக்கறதுண்டு, அனுப்பனும்னு தோணினதில்லை... சும்மா ட்ரை பண்ணலாம் போட்டேன்...உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா...

priya.r said...

//@ priya.r - அதென்ன ஒரு கமெண்ட் பர்வதபிரியானு வருது ஒரு கமெண்ட் priya.r ... ஹ்ம்ம்... டபுள் act ஆ? ஹ ஹ... ஒகே... அனாமிகாவுக்கு நீங்க proxy யா? accepted ...நல்ல காரியம் செய்ய போய் இருக்கா அனாமிகா... அதுவும் நல்லபடி நடக்க வாழ்த்துவோம்... (சந்தடி சாக்குல நீங்க அனாமிகாவை சுனாமினு சொன்னதை நான் சீக்ரட்ஆ வெச்சுக்கறேன்... ஒகே... ஹ ஹ)//

ரெண்டு காரணந்தேன் !

ஒன்னு நீ கண்டு பிடிப்பியான்னு செக் பண்ணி பார்த்தேன் !

ரெண்டு இந்த பிரியா என்ற பேர்ல கமெண்ட்ஸ் போட்டா அனாமி வந்து தோழியா இல்லை எதிரியா அப்படின்னு சொல்றதை தவிர்க்கலாம்ன்னு ஒரு நல்ல எண்ணம் தான்!

நோக்கு விஷயம் தெரியுமா ! நேக்கு கீதா மாமி வைரம் மாதிரி விலை மதிப்பிலா மாலை பரிசா கொடுத்து இருக்காங்களே !

அங்க வந்தீன்ன நோக்கும் அதில் இருந்து ஒன்னு ரெண்ட்டு உழிச்சு ச்சீ பிரிச்சு தரேன் வரேளா !

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - Not sure how I missed this comment... ha ha ha...but a good one...

//நேக்கு கீதா மாமி வைரம் மாதிரி விலை மதிப்பிலா மாலை பரிசா கொடுத்து இருக்காங்களே//

எனக்கு ஏன் குடுக்கலைனா "வைரத்துக்கே வைரமா"னு நெனச்சாங்களாம்...அதான்... ஹொவ் இஸ் இட்? ஹா ஹா ஹா...

Post a Comment