Tuesday, July 05, 2016

தாலிகட்டிய பொழுதினும் பெரிதுவக்க ...:)நான் : "ரெண்டு இளநி குடுங்க"

இளநி விற்பவர் : "தண்ணி இருக்கறதா?"

நான்  : நோ ஏன்சர், ஏன்னா அவர் என்ன கேக்கறார்னு எனக்கு சாத்தியமா புரில 

இ.வி : "ஏம்மா உங்களத்தான், தண்ணி இருக்கறதா?"

நான் : (மனசுக்குள்ள) தண்ணி இருந்தா தானே அது இளநி, இப்ப மாத்திட்டாங்களா?. தேங்காய்ல கூட கொஞ்சமாச்சும் தண்ணி இருக்குமே. இப்ப தண்ணி இல்லாம விர்சுவல் இளநி எதுனா வந்துருக்கோ, நமக்கு தான் ஒன்னும் தெரியலியோ. நாம என்ன கோமால இருந்து 20  வருஷம் கழிச்சு எந்திரிச்சு வந்து இருக்கமோனு சயன்ஸ் பிக்சன் ரேஞ்சுக்கு அடுக்கடுக்கா எனக்கு சந்தேகம் வந்துடுச்சு 

இ.வி : (கடுப்பாகி) இளநி வேணுமா? 

நியாயத்துக்கு நான் தான கடுப்பாகனும், பிளடி பிக் பேக்கெட்னு அனன்யா டிக்சன் எல்லாம் மனசுல ஓடுச்சு 

பேசாம நம்ம ஸ்ரீராம் அண்ணாச்சி மாதிரி "என்றும் அன்புடன்,  பாஸ்டன்  ஸ்ரீராம்"னு டெம்ப்லேட் கமெண்ட் குடுத்து பழி வாங்கிரலாமானு நெனச்சேன். அந்த மனுசன் கைல இருந்த இளநி வெட்டற அருவா என்னை சைலண்ட் மோடுல தள்ளிருச்சு 

அதுக்குள்ள பக்கத்துல இருந்த ஒரு அக்கா என் மேல பரிதாபப்பட்டு "தண்ணி நெறய இருக்கறதா?னு கேக்கறார்'னாங்க, கொஞ்சம் சத்தமா, ஒருவேள காது காது லேது லேதுனு நெனச்சுருப்பாங்களோ 

பின்ன காசையும் குடுத்து தண்ணி கம்மியா இருக்கற இளநி வாங்கறதுக்கு நானென்ன லூசானு வாய் வரைக்கும் வந்துருச்சு. உபகாரம் பண்ணினவங்களோட விவகாரம் கூடாதுனு பேசாம இருந்துட்டேன் 

ஒரு வழியா இளநி வாங்கிட்டு, அதுக்குள்ள ஒரு போன் வரவும் பேசிட்டு,  நான் கார்கிட்ட வரவும், அந்த உபகாரம் பண்ணின அக்கா "வீட்ல ரெம்ப செல்லமா உலகம் தெரியாம வளத்துருப்பாங்க போல, திருதிருனு முழிக்குது பாவம்"னு போன்ல யார்கிட்டயோ பேசிட்டு இருந்தாங்க. அதை என்னை பத்தி தான்னு ப்ளக்ஸ் போர்டு வெச்சா தெரியணும் :(

ஆனாலும், ஒரு விஷயத்தை இங்க சொல்லியே ஆகணும். எப்பவும் இளநி வாங்கறப்ப நானும் சஹானாவும் கார்லேயே இருந்துப்போம், அவர் தான் இறங்கி வாங்குவார், ஏன்னா அந்த மாதிரி சின்ன சின்ன வேலை எல்லாம் நாங்க செய்யறதில்ல யூ சீ 

அன்னைக்கி கரெக்டா இளநி கடைகிட்ட கார் நின்னதும் ரங்ஸ் "ஒரு போன் பண்ணனும், நீ வாங்கிட்டு வா"னார். சரினு போனேன், அதோட பலன் தான் இது 

இப்ப யோசிச்சு பாத்தா, இவர் பிளேன் பண்ணி அந்த இளநி விக்கரவர்கிட்ட எக்ஸ்டரா பத்து ரூபாய குடுத்து இந்த பல்ப் ப்ரெசென்ட் பண்ணி இருப்பாரோனு ஒரு சம்சயம் வரத்தான் செய்யுது

இதை படிச்சா, ரங்கமணி பாதுகாப்பு சங்க செயலாளர் கார்த்தி "இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்"னு சொல்ல வாய்ப்பு இருப்பதால் நான் டாபிக் மாத்திடறேன் ...:)

இந்த சம்பவம் நடந்தது போன வியாழக்கிழமை. இப்ப இந்த விவரம் ரெம்ப முக்கியமானு கேக்கறவங்க கடைசி வரைக்கும் படிங்க, புரியும் :)

இதோட இம்பேக்ட்டோ என்னமோ, மறுநாள் நானும் உலகத்த  தெரிஞ்சுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு பேஸ்புக் பக்கம் வந்தேன்

ரெம்ப நாள் கழிச்சு வந்திருக்கோமேனு ஒரு போஸ்ட் போட்டு "ப்ரெசன்ட் மிஸ் / சார்" சொல்லிட்டு நட்பு வட்டமெல்லாம் என்ன பண்றங்கன்னு பாப்போம்னு உலாத்திட்டு இருந்தேன் 

ஒரு இடத்துல சடார்னு சடன் பிரேக் போட்டாப்ல நின்னேன். என்ன மேட்டர்னா ஒரு காளிக்கு... சாரி சாரி தோழிக்கு முதல் புள்ள பொறந்தப்ப பேசினது, இப்ப பாத்தா ரெண்டாவது புள்ளய பத்தி போஸ்ட். என் சொல்லலைனு கேட்டு ஆப்பு வாங்கினது தனிக்கதை, அது பிஹைன்ட் தி ஸ்கிரீன்ஸ்

அட ராமா, இப்படியா ஊர் உலகத்துல என்ன நடந்ததுனு தெரியாம புள்ளய வளக்கறேன் பேர்வழினு இருப்பேன்னு தோணுச்சு 

போன வாரம் ரங்ஸ் கூட இதை தான் "ஹெலிகாப்டர் பேரன்டிங்"னு  கிண்டல் பண்ணினாரோ. எங்கம்மா அதுக்கு மேல "கங்காருகுட்டி மாதிரி  புடிச்சு வெச்சுட்டு அவளை போட்டு படுத்தற"னு என்னமோ நான் அவளை கொடுமைப்படுத்தற மாதிரி சொல்றாங்க, ஹ்ம்ம், ஆல் டைம்ஸ் ஆப் அப்பாவி :(

இந்த இரண்டாவது சம்பவம் நடந்தது வெள்ளிக்கிழமை
 
கட் பண்ணி ஒப்பன் பண்ணினா.....வெள்ளிக்கிழமை மாலை 6pm 

"ஐ நீட் எ பிரேக்" 
இந்த டைலாக் நான் சொன்னது தான், அதுவும் ரங்ஸ்கிட்ட. நீங்க உடனே வேற பிரேக் எல்லாம் கற்பனை பண்ணிடாதீங்க, அதெல்லாம் அவ்ளோ சுலபத்துல அவரை நிம்மதியா இருக்க  விட்டுட மாட்டேன் 
நான் சொன்ன பிரேக் என்னனா, டெய்லி ரொட்டீன்ல இருந்து ஒரு சேன்ஜ் வேணும், அதுவும் ஒரு நாள் அப்படினு வாய விட்டேன் 
மேல சொன்ன ரெண்டு சம்பவத்தோட பாதிப்போ என்னமோ, என் போதாத நேரம் வாய விட்டுட்டேன். அநேகமா அந்த நேரத்துல நம்ம சனிபகவான் என் நாக்குல சலங்கை கட்டி அரங்கேற்றம் பண்ணி இருப்பார்னு நினைக்கிறேன் 
அதுக்கு ரங்ஸ் "சண்டே உன்னோட டே. சோ, மொதல்ல கோவில் போய்ட்டு, அப்புறம் சினிமா போய்ட்டு, அப்புறம் லன்ச், அப்புறம் ஏதோ ஆடிவெள்ளிக்கு புடவை எடுக்கணும்னியே அதை  ரிலாக்ஸா எடுத்துட்டு வரலாம்"னார் 
அந்த கடைசி ரிலாக்ஸ் கமெண்ட் எதுக்குனு என்கூட புடவை ஷாப்பிங் பண்ணினா நம்ம அனன்யாவுக்கு தெரிஞ்சு இருக்கலாம் :) 
எனக்கு ஆனந்த கண்ணீர் வராத கொறை தான், பின்ன கல்யாணம் ஆகி இம்புட்டு நாளுல அவரே ஒரு அஜெண்டா போட்டு இருக்காரே, சூரியன் மேக்க உதிச்சிருக்சோனு தோணிடுச்சு
"எல்லாம் சரி தான், ஆனா சஹானாவை நாள் பூரா அலைய வெக்கணுமே பாவம்"னேன் 
"சஹானாவா, அவ எங்க வர்றா?"
"வராம பின்ன, ஹோம் அலோன் கொழந்தை மாதிரி வீட்ல தனியா விட்டுட்டு போறதா நெனப்பா?"
"ஹோம் அலோன்ல அவங்க விட்டுட்டு போறதில்ல, அவனா விடுபட்டு போயிருவான்"னார்
விட்டுட்டு /  விடுபட்டு, அட அட அட இதான் பிளவரோட சேந்த நாறும் சென்ட் அடிச்சுக்கும்னு சொல்றது போலனு நான் மனசுக்குள்ள சிலாகிக்க, அதே நேரம் நடப்பு நெனப்புக்கு வர 
"ரெம்ப முக்கியம் இப்ப அந்த ஹோம் அலோன் கதை, சஹானா கதைக்கு வாங்க"
"சஹானாவை உங்கம்மாகிட்ட விட்டுட்டு போலாம்"
"வாட்ட்ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ",  எஸ், திஸ் இஸ் மீ அண்ட் மீ ஒன்லி 
"உங்கம்மாகிட்ட தான விட சொன்னேன், என்னமோ பூலான்தேவிகிட்ட விட சொன்ன ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ற"
"எங்கம்மாவ பத்தி பேசும் போது பூலான்தேவி எங்க வந்தா?" மீ கிவ்விங் டெர்ரர் லுக் 
"நான் சாதாரணமா தான் சொன்னேன், நீதான் உங்கம்மாவை அப்படி நெனைக்கற மாதிரி இருக்கு, அதான் சஹானாவ விட மாட்டேங்கற" 
இவர் எப்ப இப்படியெல்லாம் பேசி பழகினாருனு நான் முழிச்சுபயிங். கடந்த ரெண்டு வருசமா நான் செலக்டிவ் கோமால இருந்தப்ப நாட்ல மட்டுமில்ல வீட்லயும் நெறய நடந்துருக்கு போலனு நெனச்சுட்டேன் 
"தாலிகட்டிய பொழுதினும் பெரிதுவக்கும் தன் ரங்ஸ்ஐ புத்திசாலி என கேட்ட தங்ஸ்" என்ற புதுக்குறளுக்கு ஏற்ப, நான் தெகைச்சு போய் நின்னுட்டேன் 
இதுவரை சஹானாவை எங்க அம்மாகிட்ட விட்டதில்லைனு இல்ல, உடம்புக்கு முடியலைன்னா ஹாஸ்பிடல் போக, அப்புறம் எதுனா தவிர்க்க முடியாத இறப்பு போன்ற விஷயங்களுக்கு போவேன், ஆனா அதிகபட்சம் ரெண்டு மணி நேரம் தான், அதுக்கே நாலு போன் பண்ணி உசுர வாங்குவேன் 
"உங்கம்மா உன் போனை அட்டெண்ட் பண்ணுவாங்களா, அவளை பாப்பாங்களா?"னு ரங்ஸ்'கிட்ட திட்டும் வாங்கினதுண்டு 
அப்படி இப்படி சஹானாவை எங்கம்மாகிட்ட விட்டுட்டு ஊர் சுத்தறதுன்னு நான் கன்வின்ஸ் ஆனேன், இல்ல கன்வின்ஸ் செய்யப்பட்டேன்  
இது பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது வெள்ளிக்கிழமை 7pm. மறுநாள் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சு நைட் தூங்கற வரைக்கும் எங்கம்மாவை சஹானாவை தத்து குடுக்கற ரேஞ்சுக்கு கிளாஸ் எடுத்தேன். பேத்தியை அவங்ககிட்ட விட்டா போதும்னு எங்கம்மா சகிச்சுக்கிட்டாங்க போல 
அன்னைக்கி போன் பண்ணின பண்ணாத ஊர் உறவு சொந்தம் பந்தம் நட்பு நடப்பு எல்லார்கிட்டயும் சஹானாவை விட்டுட்டு சினிமா போறேன் சஹானாவை விட்டுட்டு சினிமா போறேன்னு பெருமை பீதாம்பரியா பேசி கொன்னேன். பறை அடிச்சு சொல்லாதது தான் கொறை 
ஆனா, சனிக்கிழமை நைட் தூக்கமே வரல. போதாக்குறைக்கு சஹானா நடுராத்திரி தூக்கத்துல  "ம்மா"னு வந்து தாச்சுக்கவும் ஒரே பீலிங்ஸா போச்சு
ரங்ஸ் காலை ஏழு மணிக்கு எந்திரிச்சி வந்தப்ப "நான் ரெடி ஆகறேன், நீங்க சஹானாவை  எழுப்புங்க"னேன் 
"அவ மெதுவா எந்திரிக்கட்டும் விடு"னார் 
"இல்ல, அவளையும் கூட்டிட்டு போலாம்"னேன், வேணும்னே எங்கம்மா முன்னாடி, அப்ப தான ரங்ஸ் ஒண்ணும் சொல்ல முடியாதுனு, வரப்போகும் விபரீதத்தை உணராமல் 
மாமியாரும் மருமகனும் என்னை பாத்த பார்வை இருக்கே, அட அட அட, ஒரு நாளைக்கு எங்கூரு பவர் சப்ளைக்கு சரியா போயிருக்கும்னா பாருங்க, அப்படி இரு உக்ரம் 
அரை மணி நேரம் நீயா நானா விவாதம் ஓடுச்சு, கோபிநாத் மட்டும் அங்க இருந்திருந்தா அநேகமா இனி இந்த கோட்டை போட்டா என் பேரை மாத்திக்கறேன்னு சொல்லிட்டு ஓடிப்போய் இருப்பார் 
" 'அப்பா' படத்துக்கு டிக்கட் புக் பண்ணிட்டு இப்படி குழந்தய விட்டுட்டு போலாம்னு சொல்றீங்களே?"னு நான் சென்டிமெண்டா ரங்ஸ்'ஐ தாக்க 
"சஹானாவை பாத்துக்குவாங்கனு உங்கம்மா மேலயே உனக்கு நம்பிக்கை இல்லையா?"னு ரங்ஸ் சமயம் பாத்து ஆப்பு வெச்சார், ("தாலிகட்டிய பொழுதினும்" மொமெண்ட் கேன்சல்)
அட ராமா, நானே செல்ப் லெக் புல்லிங் வெச்சுட்டேன் போல இருக்கே'னு முழிக்க, எங்கம்மா விட்டா அழுதுருவாங்க போல ஆகிட்டாங்க 
"அய்யோ அப்படி எல்லாம் இல்லமா, அவ ரகள பண்ணுவாளோனு..." என நான் இழுக்க 
"பர்த்டே அன்னைக்கி திட்ட கூடாதுன்னு பாக்கறேன்"னு சொல்லிட்டு மை மம்மி "ஐ ரெஸ்ட் மை கேஸ்"னு உள்ள போய்ட்டாங்க  
கடைசி முயற்சியா  என் அம்மு குட்டிய வெச்சு பிளே பண்ணுவோம்னு "சஹானாமா, அம்மா பை போறேன்"னு ஒரே அனிமேட்டிக்கா ஏக்ட் எல்லாம் பண்ணி சொல்லிட்டு, இப்ப அவ அழுவா, அதான் என்னோட துருப்பு சீட்டுனு காத்துட்டு இருந்தேன் 
நான் பெத்த மகராசி சிரிச்சிட்டே "பை பை"னு கை காட்டிட்டு பழக்க தோஷத்துல "குட் நைட்" வேற சொல்லிருச்சு  
உடனே வூட்ல இருந்த எல்லா பின்லேடன் லேடிகளும்  கூட்டணி அமைச்சு ஒரே "சிங் இன் தி ரைன்" தான். அதுக்கு தலைமை தாங்கியவர் யார்னு சொல்லியா தெரியணும் 
இதத்தான் ஊரே சிரிப்பா சிரிக்கற பொழப்பா போச்சுனு சொல்லுவாங்க போல
ஹ்ம்ம்... அப்புறம் வழக்கம் போல சஹானா குடுத்த பல்பை பத்திரமா தூக்கி "செலக்டிவ் அம்னீசியா" போல்டர் ஒப்பன் பண்ணி "பல்ப்ஸ் ரிசீவ்ட்" செக்சன்ல ஸ்டோர் பண்ணிட்டு, கெளம்பி ஊர் சுத்த போய்ட்டேன் 
அப்புறம் ரங்ஸ் அஜெண்டா படி, ஒம்பது மணிக்கு வீட்டை விட்டு கெளம்பி, மொதல்ல மனச நெறைச்சு (கோவில்), கண்ணை நெறைச்சு (சினிமா), வயத்தை நெறைச்சு  (ஹோட்டல்), கைய நெறைச்சு (ஒரே ஒரு சுடிதார், ரெண்டே ரெண்டு சாரீ, மூணே மூணு புக்ஸ்) மட்டும் வாங்கிட்டு, நல்ல புள்ளையா நைட் எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சேந்தோம்
வந்ததும் என் பெண்ணரசி மூஞ்சிய திருப்பிக்கிட்டா, அப்புறம் அவளுக்கு லஞ்சமா வாங்கிட்டு வந்த ட்ரெஸ் குடுத்து தாஜா பண்ணினேன்  
இப்படியாக எனது பிறந்த நாள் இனிதே நிறைவடைந்தது :)
இதை நேத்தே போஸ்ட் போடணும்னு நெனச்சேன், சண்டே அவளை விட்டுட்டு போன எபெக்ட், நேத்தைக்கு கம் போட்டு ஒட்டாத குறையா ஒண்ணும் செய்ய விடல 
என்னோட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள், அதுக்கு ரிட்டன் கிப்ட் தான் இந்த போஸ்ட். என்ஜாய் :)
பாப்ஸ் எந்திரிச்சுட்டா, இனி நத்திங் டூயிங். உங்க தனி தனி வாழ்த்துக்கு தனி தனி நன்றி நாளை. நன்றி மீண்டும் 

Friday, July 01, 2016

ஒற்றை ரோஜா ... :)


"ஐயோ பாவம் கடைக்காரர் எப்படி முழிக்கறார் பாரு, பிரிண்ட்ல வராத புக் எல்லாம் கேக்கறியேம்மா. நீ படிக்கற வேகத்துக்கு எழுதறதுக்கு எழுத்தாளர் இல்ல போல"னு என்னோட ரங்ஸ் கிண்டல் செஞ்ச காலம் ஒண்ணு இருந்தது. அதெல்லாம் லாங் லாங் எகோ சோ லாங் எகோ...

"பாண்டவர் அணி அறுபடை வீடு ஆனதன் பின்னணி என்னனு குமுதத்துல வந்திருக்கே படிச்சீங்களா?"னு நான் போன வாரம் ரங்ஸ்'ஐ பாத்து கேட்க, அவர் சிரிச்ச சிரிப்புல சஹானா மெரண்டு போய் அவ கைல வெச்சிருந்த 4X4 சைஸ் வெஜிடபிள்ஸ் போர்டுபுக்கை விட்டெறிய, அது நங்குனு என் நெத்தில வந்து மோதுச்சு 
மோதின எடத்துல தேச்சு விட்டுட்டு இருக்கறத கூட பொருட்படுத்தாம, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம "அந்த காந்தி செத்து பல மாசம் ஆச்சு"னு ரங்ஸ் தனது ஸ்டாக்கில் இருந்து ஒரு பல்பை பார்ஸல் செய்தார்

"இந்த அவமானம் உனக்கு தேவையா"னு மைண்ட்வாய்ஸ் கேட்க, "சரவணன் மீனாட்சி பார்ட் 4 வர்ற வரைக்கும் புக் வாங்கினா என் பேரை மாத்திக்கறேன்"னு சபதம் போட்டேன்

நேத்தைக்கு மதியம் அதிசயமா என் புத்திரி கொஞ்சம் எஸ்ட்ரா லார்ஜ் தூக்கம் போடவும், கண்ணு நம நம'ன்னது. ஆடின காலும் பாடின வாயும் மட்டுமில்ல, படிச்ச கண்ணும் சும்மா இருக்கறது சிரமம்னு அனுபவப்பட்டவங்களுக்கு புரியும்

கண் நம நமப்பை போக்க, எங்காச்சும் ஏதாச்சும் சிக்குதானு தேடினேன். மூணு மாசம் முன்னாடி வாங்கி, சஹானா கைல சிக்கி சின்னா பின்னமாவதில் இருந்து தப்பித்த ஒரு ராணி முத்து சிக்குச்சு. அதெப்படி அந்த அதிகம் யூஸ் பண்ணாத கபோட்'குள்ள போனது எனும் மர்மம் இன்னும் மர்மமாவே உள்ளது

நான் எப்படி அதை நேரத்துல அங்க தேடினேங்கறதும் அனன்யானுஸ்யமே சாரி சாரி அமானுஷ்யமே. அது வேற ஒண்ணுமில்ல, கப்போர்ட்'னதும் எனக்கு Ananya Mahadevanதேடும் படலம் ஞாபகம் வந்து கை ஸ்லிப் ஆகி அவ பேர் டைப்பிடுச்சு. ஏம் ஐ ரைட் Hema Sridhar
என்ன சொல்லிட்டு இருந்தேன்? ஆங்... ராணி முத்து சிக்குச்சு. அதுல கல்கி எழுதின "ஒற்றை ரோஜா"னு ஒரு கதை. படிக்க படிக்க வெக்கவே மனசில்லை. ஒரே மூச்சுல படிச்சு முடிச்சேன்

ஒரு ரோஜா ஒரு வைரம் ஒரு பொண்ணு இதை மட்டும் வெச்சுட்டு என்னமா எழுதி இருக்கார். இதுக்கு மேல நான் விளக்கினா கதையோட சுவாரஷ்யம் போய்டும். சான்ஸ் கிடைச்சா படிங்க, இதை சொல்ல தான் இந்த போஸ்ட். இதை ஒரு வரில சொன்னா ஆகாதானு Srinivasan Govindan(தக்குடு) சபிக்கறது இங்க வரைக்கும் கேக்குது

அப்படி ஒரு வரில மட்டும் நான் சொல்லி இருந்தா "அச்சச்சோ அப்பாவி அக்கௌன்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க"னு நம்ம Hussain Amma,  Geetha Sambasivam மாமி & Shanthy Mariappan அக்கா, மற்றும் நம்ம உறவினரெல்லாம் மார்க்குக்கு பெட்டிஷன் அனுப்பிடுவாங்களோனு தான் இப்படி ஒரு வில்லங்கமான சாரி விளக்கமான பதிவு

உண்மைய சொல்லனும்னா இதை பிளாக்ல போடணும்னு தான் மொதல்ல நெனச்சேன். நான் நெனச்சு தொவச்சு காயவெக்கறதுக்குள்ள என் குல கொழுந்து லேப்டாப்பை கும்மி விடும் அபாயம் இருப்பதால் இப்போதைக்கு முகநூல் மட்டுமே நான் நூல் விட சிறந்த இடம்னு முடிவோட இங்கன வாலிட்டேன். 

அப்போ இதென்னாவாம்னு கேக்கறவங்களுக்கு, அது போன வாரம் இது  வாரம். அதோட ஒரிஜினாலிட்டி கெட்டு போய்ட கூடாதுன்னு அப்படியே போட்டுட்டேன் அதன் பின் இப்போ பிளாக்லையும் போட்டாச். இப்படியே விட்டா பிளாக் துருபிடிச்சு போய்டும்னு ஒரு பயம் தான் :)

இன்னும், அதே ராணி முத்துல இரட்டை நாவலா Vidya Subramaniam மேடத்தோட "கற்பூர காற்று" படிக்கறது பாக்கி. அதை படிச்சுட்டு இன்னொரு பதிவிடறேன்

இந்த அழகுல நேத்து ரங்ஸ் சொன்ன ஒரு மேட்டர் கொளுத்தற வெயில்லே கொள்ளு தண்ணி வேணுமானு கேட்டாப்ல இருந்தது எனக்கு

அப்படி என்ன சொன்னாரா "போன வருஷம் மாதிரியே இந்த வருசமும் நம்மூர்ல ஆகஸ்ட் மாசம் புக் பேர் போடறாங்களாம், போலாமா?"னு கேட்டார். இதுக்கு அவர் Madhuram Prabhakar செஞ்ச உப்புமாவையே எனக்கு பார்ஸல் பண்ணி குடுத்து இருக்கலாம்னு தோணி போச்சு

"போங்க சார், போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க"னு சொல்லலாம்னு நெனச்சேன், அதேயே பொழப்பா செய்யற வாத்தியார்கிட்ட வேற ஏதாவது புதுசா சொல்லலாம்னு நான் யோசிக்க, அதுக்குள்ள "அம்மா ஜீ ஜீ ஜீ"னு ஆரம்பிச்சா என் தங்கம்

"யாரது அமிதாப் ஜீ வந்திருக்காரா உங்க வீட்டுக்கு?"னு நீங்க டென்ஷன் ஆக வேண்டாம், இது அந்த ஜீ இல்ல குடிக்கற ஜீ, அதாவது ஜிய்யாவின் (தண்ணி) மழலை வடிவம் 

மீண்டும் சந்திப்போம்...:) 

Tuesday, June 02, 2015

எங்கள் வீட்டில் பூத்த குறிஞ்சிப்பூ...:)

Image result for its a girl teddy ரெம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் இருக்கா இல்லையானு எட்டி பாத்தேன். இதை யாரு தூக்கிட்டு போய்ட போறா. சும்மா குடுத்தாலும் தெரிச்சு ஓடிட மாட்டங்களா'னு மைண்ட்வாய்ஸ் ஸ்டமக் பயரை கிளப்புச்சு. ஹ்ம்ம்...

சரி ரெம்ப நாளா எழுதலியே, இப்படியே இருந்தா அப்புறம் நாம ஹிஸ்டரி ஆகிடுவமோனு ஒரு பயம் வந்துடுச்சு. புரியலையா? அதாங்க "போன நூற்றாண்டில் அப்பாவி என்ற பெயரில் ஒரு அப்பாவி பெண் ப்ளாக் எழுதி கொண்டிருந்தார்"னு ஒண்ணாம் வகுப்பு பாட புத்தகத்துல வர்ற மாதிரி ஆக வேண்டாம்னு நான் ரீ-என்ட்ரி ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்
 
மைண்ட்வாய்ஸ் : "ஹ்ம்ம்... ஜோதிகா கூட அவங்க ரீ-என்ட்ரி பத்தி இவ்ளோ பில்ட் அப் குடுத்து இருக்க மாட்டாங்க" என்ற குரல் பக்கவாட்டில் இருந்து வர 
 
அப்பாவி : ஒரு  வகைல பாத்தா நானும் ஜோதிகாவும் ரீ-என்ட்ரி ஆகரதுல ஒரு  ஒற்றுமை இருக்கு. அவங்க 36 வயதினிலே ரீ-என்ட்ரி, நானும் அதே அதே 
 
மைண்ட்வாய்ஸ் : ஹும்... இது வேறயா? 

அப்பாவி : ஆப்வியஸ்லி...

மைண்ட்வாய்ஸ் :  என்னது உனக்கு நீயே ஆப்பு வெச்சுட்டியா?

அப்பாவி : அதுக்கு தான் நீ இருக்கியே... நான் சொல்ல வந்தது... சரி வேண்டாம் விடு உனக்கு இங்கிலீஷ் புரியாது 

மைண்ட்வாய்ஸ் : உன்னை விட்டா நீ இப்படிதான் பேசிட்டே இருப்பே, என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு கெளம்பு 
 
அப்பாவி : மைண்ட்வாய்ஸ், சும்மா நடிக்காத. இவ்ளோ நாள் நான் எழுதலைனு நீ எவ்ளோ பீல் பண்ணின 
 
மைண்ட்வாய்ஸ் : அது.... அது...
 
அப்பாவி : ம்ம்... சொல்லு சொல்லு 
 
மைண்ட்வாய்ஸ் : என்ன பண்றது, தொல்லையோ சொல்லை(கொசு)யோ பழகிட்டு இல்லைனா கொஞ்சம் கஷ்டம் தானே 
 
அப்பாவி : நல்லாவே சமாளிக்கறே... சரி சரி நான் போஸ்ட் போடணும், நீ எடத்த காலி பண்றியா?
 
மைண்ட்வாய்ஸ் : இனி தான் போஸ்டே'வா... ஹ்ம்ம். சரி, எதை பத்தி எழுதப்போற?  அது சரி இவ்ளோ நாள் எங்க போன? என்ன ஆச்சு?

அப்பாவி : எல்லாம் நல்ல  விஷயம் தான். ஓகே நீ விடு ஜூட். இனி நான் ப்ளாக் பிரெண்ட்ஸ்கிட்ட நேரடியா பேசிக்கறேன்
 
ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லாரும் சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்த பக்கமே வரல, அதுக்கு மொதல்ல ஒரு சாரி கேட்டுக்கறேன்

சரியா சொல்லணும்னா அதுக்கு முன்னாடியும் அவ்ளோ அதிகம் போஸ்ட் போட முடியல. மூணு வருசத்துக்கு முன்னாடி கனடால இருந்தப்ப கதையே வேற, எந்நேரமும் ப்ளாக்கிங் தான். ஆமாங்க, கனடால இருந்து இந்தியா வந்து சரியா மூணு வருஷமாச்சு, என்னாலையே நம்ப முடில. நாளு ஓடியே போய்டுச்சு. அதுவும் கடந்த 9 மாசம் ஒன்பது நிமிசமா ஓடிடுச்சு 

அதுக்கு காரணம், எங்க வீட்டுல பூத்திருக்கும் குறிஞ்சிப்பூ. அதெப்படி குறிஞ்சிப்பூ வீட்டுல பூக்கும்னு நீங்க கேக்கறது புரியுது. நீங்களே சொல்லுங்க, பன்னிரண்டு வருஷம் கழிச்சு பூத்தா அது குறிஞ்சிப்பூ தானே :) எங்க அம்மா அப்படி தான் அவள கூப்பிடறாங்க 

ஆமாங்க, எங்க வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்திருக்கா. அவளுக்கு சஹானானு பேர் வெச்சுருக்கோம், 9 மாசம் ஆச்சு பாப்பாவுக்கு. அதான் லாங் லீவ். இதோட லீவ் லெட்டர் முடிஞ்சுது. இனி சஹானா புராணம் கொஞ்சம்...

அந்த நாள் என் வாழ்க்கைல மறக்க முடியுமானு தெர்ல. மொதல் மொதல்ல பட்டு செல்லத்த என்கிட்ட கொண்டு வந்து காட்டினப்ப, இது போதும்னு தோணுச்சு. அதுக்கப்புறம் ரெம்ப நேரம் கண்ணுலேயே காட்டல. ஒரே அழுவாச்சியா வந்தது, அப்புறம் ஒரு வழியா என்கிட்ட குடுத்தாங்க. யார் மாதிரினு குழம்ப வேண்டிய அவசியமே இல்லாம, அப்படியே அவங்க அப்பாவை போட்டோகாப்பி பண்ணின மாதிரி இருந்தா, உண்மையா சொல்லணும்னா அவர் மேல கொஞ்சம் பொறாமை கூட வந்தது அப்போ :)

அஞ்சாவது நாள் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தது தான் ஞாபகம், அப்புறம் நாட்கள் ரெக்கை கட்டிட்டு பறந்துடுச்சு. அதுவும் நாலு மாசத்துல இருந்து தனியா வெச்சுட்டு ஒரே காமடி தான் போங்க 

ஆனா ரெண்டு மாசம் முன்னாடி மொதல் மொதல்ல அம்மா சொன்னப்ப, என்னை கைல புடிக்க முடியல. இப்ப கொஞ்ச நாளா அண்ணாவும் (நாங்க அப்பாவை அண்ணா'னு  தான் சொல்றது) சொல்ல தொடங்கியாச்சு. இப்ப ஒரு வாரமா "அம்" "அண்" அப்படினு ஷார்ட் பார்ம்ல கூப்பிட தொடங்கி இருக்காங்க மேடம் :)

தவழவும் தொடங்கிட்டா, நைட் பத்து மணிக்கி நமக்கு சாமி ஆடும், அப்ப தான் மேடம் சூப்பர் ப்ரெஷ்'ஆ இருப்பாங்க. பகல்ல அவ தூங்கற நேரம் தான் நான் வேலய முடிக்கணும், அதான் குட் நியூஸ் போஸ்ட் போடக் கூட இவ்ளோ நாள் ஆய்டுச்சு 

இந்த ஒரு வாரமா நாம என்ன செஞ்சாலும் சொன்னாலும் ரிபீட் பண்ண ட்ரை பண்றா, பாத்து பேச வேண்டியதா இருக்கு. நேத்து அப்படி தான் சாப்பிட அடம் பிடிக்கறானு "அடி வேணுமா?"னு சும்மாவாச்சும் கைய தூக்கினதுக்கு, அவளும் அதே ரிபீட். ரங்கஸ்'க்கு ஒரே குஷி ஆய்டுச்சு. அவ்வ்வ்வ்வ்... கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல 

சரிங்க, சஹானா சிணுங்க தொடங்கியாச்சு. அப்புறம் பாப்போம். இனி வாரம் ஒரு போஸ்ட் தொடரும் பழையபடி. டேக் கேர். உங்களுக்காக சஹானா போட்டோ இதோ அன்புடன்,


அப்பாவி 

Thursday, July 04, 2013

உன்னை பார்த்த பின்பு நான்...:)))

 
மொதல்ல ஒரு அதி முக்கியமான விசயத்த சொல்லிடறேன். நேத்தைக்கு ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ...:) என்னதிது அல்பம் மாதிரி தன்னோட பர்த்டே'க்கு தானே பாடிக்குதுனு நெனைக்கறீங்களா. நான் அப்படி தாங்க
 
அப்ப மூணு வயசுலயும் சரி... இப்ப முப்பது வயசுலயும் சரி... ஒகே ஒகே டென்சன் ஆகாதீங்க. முப்பதை தாண்டி மூணு வருசமாச்சு. ஐயயோ இல்லைங்க நேற்றோட முப்பதை தாண்டி வருஷம் நாலாச்சு. என்னது இவ்ளோ சிம்பிளா வயச சொல்றேனு யாரும் நோ டென்ஷன் ஒகே. இதென்ன சிதம்பர ரகசியமா? சிலருக்கு பர்த்டே விஷ் சொன்னா "அதையேங்க ஞாபக படுத்தறீங்க. வயசு ஆகுதேனு வருத்தமா இருக்கு"னு பீல் பண்ணுவாங்க
 
எனக்கு அப்படியெல்லாம் இல்லப்பா. வயசு கூடினதால எதையும் இழந்துட்டதா நான் நினைக்கல. அந்த அந்த வயசுக்கு உள்ள சந்தோசங்களை அனுபவிக்கணும், அதுக்கு மேல நோ பீலிங்னு சமீப காலமா நான் முடிவுக்கு வந்துட்டேன். என்னத்த சாதிச்சுடேனு இவ்ளோ பீலா விடறேன்னு நீங்க கேக்கறது புரியுது. எல்லாரும் சாதிச்சா சாதனைக்கு மதிப்பில்லாம போய்டும் யு சி...:)
 
ஜோக்ஸ் அபார்ட்.... உத்ரகாண்ட்ல உயிர் பிழைச்சு வந்தவங்கள கேளுங்க.., உயிர் வாழ்றதே சாதனை தான்னு சொல்லுவாங்க. நிலவரம் அப்படி இருக்கு. இயற்கை பேரழிவுனு ஈஸியா பழிய இயற்கை மேல போட்டுட்டு தப்பிச்சுட்டோம். அதுல நம்ம தப்பு என்னனு யாரும் யோசிக்கற மாதிரி காணோம். முடிஞ்ச வரை இயற்கையோட கோபத்துக்கு ஆளாகாம இருக்க முயற்சி செய்வோம்... சரி தானா
 
என்ன சொல்லிட்டு இருந்தேன்னு இப்ப மறந்தே போச்சு... ஹ்ம்ம்... அதாவது என்னோட மூணு வயசுலயும் சரி இப்ப முப்பது சொச்சம் வயசுலயும் சரி, எனக்கு பர்த்டே எனக்கு பர்த்டேனு நானே சொல்லிக்கிட்டு இருப்பேன். சிலர் என்னை கிண்டல் கூட பண்ணுவாங்க. இதுல என்னங்க இருக்கு... ஏன் வயசு ஏற ஏற நாம இந்த பூமிக்கு வந்த தினத்தை கொண்டாடறது தப்பா? எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா. 80 ஆனாலும் (இருந்தா பாப்போம்) பிறந்த நாள் எனக்கு ஸ்பெஷல் தான்
 
நெறைய பேருக்கு மனசுல இப்படி தான் இருக்கும். ஆனா வெளிய காட்டிக்க மாட்டாங்க. நாம அப்படி இல்லைனு தெரிஞ்சுது தானே. சரி மேட்டர்க்கு வரேன். என்னை விட சின்னவங்க எல்லாம் "ஹேப்பி பர்த்டே டு யு" பாடிட்டு சண்டை போடாம ஆளுக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கோங்க, நன்றி தம்பி தங்கைகளே
 
 
 
அப்புறம், பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ், உங்களுக்கு பாயசம் கப்ல இருக்கு, நன்றி. பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணாம ஹேப்பி டு யு பாடினா, இனிமே உங்க வீட்டு இட்லி கல்லு கல்லா வரும்னு சாபம் போட்டுடுவேன், ஆமா சொல்லிட்டேன் ...:))
 
 
என்னோட பிறந்த நாளுக்கு தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், கூகிள் பிளஸ் மற்றும் பேஸ்புக் மூலமாக வாழ்த்திய ப்ளாக் நட்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எல்லாரும் பிஸி தான். அதுக்கு இடைலயும் பிறந்த நாளை நினைவு வெச்சு (அல்லது பேஸ்புக் ரிமைன்டர் உபயத்துல..;) வாழ்த்தறது இன்னைக்கி அவசர உலகில் பெரிய விஷயம். நன்றி மீண்டும்
 
எல்லாம் சரி... நீ இதுவரைக்கும் சொன்னதுக்கும் இந்த போஸ்ட் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா. சொல்றேன் சொல்றேன்... அடுத்த மேட்டர் அதான்
 
ஜூன் மாதத்தின் இறுதி நாளில்... ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடிகள் ஆரம்பிக்கும் முந்திய நாளில்... கோவையின் பிரபலமான குறுக்கு சந்து தெருவில் (கிராஸ் கட் ரோடு) அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் வளாகத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது
 
..... இப்படி எல்லாம் பில்ட் அப் பண்ணி Facebookல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு "என்னாச்சு?"னு பத்து பேர் கேக்க, அதை பாத்து இன்னும் பத்து பேர் "இவங்கதான அவங்கதான"னு கெஸ் பண்ண, அதை பாத்து இன்னும் பத்து பேர் லைக் போட, அதை பாத்து இன்னுமொரு பத்து பேர் "நான் அப்பவே சொன்னேன்ல"னு கமெண்ட் போட, ஹ்ம்ம்ம்ம்.... அப்படி இப்படி ஒரு அம்பது ஹிட் தேத்தலாம்னு நான் கனவுல மிதந்துட்டு இருந்த வேளையில்...
 
சென்னை மண்ல ஒரு கால் பதிச்ச கையோட... before we proceed further எனக்கு ஒரு டவுட், அதேங்க கால் பதிச்சாலும் கால் பதிச்ச கையோடனு சொல்றாங்க, கால் பதித்த காலோடனு சொல்றது தானே சரி... யோசிங்க நல்லா யோசிங்க... நோ நோ நோ அதுக்காக "சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறாள் அப்பாவி. கோவை களவாணி ச்சே கலைவாணி" அப்படினெல்லாம் பட்டம் குடுக்க கூடாது இப்பவே சொல்லிட்டேன்
 
ம்... எங்க உட்டேன்... ஆங் கால்ல உட்டேன்... சென்னை மண்ல கால் பதிச்ச காலோட கோயம்பேடு பஸ் ஸ்டேன்ட்ல ஒத்தை கால் தவமா இந்த விசயத்த ஸ்டேட்டஸ் மெசேஜ்'ஆ போட்டு கமெண்ட் அள்ளிட்டா அந்த அபூர்வ சாந்தாமணி... ஹ்ம்ம்... அவ இருக்காளே அவ...யாருனு கேக்கறீங்களா? ஒ... சாரி சாரி... என்ன இருந்தாலும் வயசுல மூத்தவங்கள அவ இவனு பேசறது தப்பு...:) அவங்க... இப்ப தான் சரி
 
அவங்க வேற யாரும் இல்லைங்க... மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன் அப்படினு சபதம் எடுத்து அந்த மகாதேவரையே மணாளனாய் பெற்ற அனன்யா தான். கொஞ்சம் ஓவரா இருக்கோ... சாரி லேட்லி கொஞ்சம் சரித்திர நாவல்களா படிச்சதோட எபக்ட். அதை பத்தி தனி போஸ்ட் வரும், ச்சே ச்சே இதுக்கெல்லாம் அழக்கூடாது. இதுவும் கடந்து போகும்னு கூலா இருக்கணும் ஒகே
 
இந்த அம்மணி "உங்க ஊருக்கு வரேன் உங்க ஊருக்கு வரேன்"னு கிட்டத்தட்ட ரெண்டு மாசமாவே மெரட்டிட்டு இருந்தா. உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் சமாளிச்சுட்டு "வாராய் என் தோழி வாராயோ... கோவை மண்ணில் கால் பதிக்க வாராயோ"னு பாடினேன்
 
அவளுக்கே நம்பிக்கை இல்ல போல இருக்கு "நெஜமாவா கூப்பிடரே"னு கேட்டா. "நிச்சியமா... எங்க வீட்லயே நீ தங்கிக்கலாம்"னேன். உடனே இந்த ஆபிசர் அம்மா "நோ நோ... எனக்கெல்லாம் CAG Prideல PH ப்ளோர்ல சூட் புக் பண்ணி இருக்காங்க என்னோட கிளையன்ட்"னு நான் எதிர்பாத்த மாதிரியே பீலா விட்டா. அதோட விட்டாளா "AUDI கார்ல தான் பிக் அப் பண்ண வருவாங்க"னு வேற பில்ட் அப்பு
 
ம்கும்... AUDI காராம் AUDI கார், ரெம்ப ஆடாதடி, ஆடி தள்ளுபடில உன்னை தள்ளி விட போறாங்கனு வாய் வரைக்கும் வந்தது. சரி நேர்ல பாக்கும் போது டெபொசிட் காலி பண்ணலாம்னு பொறுத்துகிட்டேன்.
 
இதோ வரேன் அதோ வரேன்னு அந்த நாளும் வந்தது (போன ஞாயிற்றுகிழமை). நான் வந்திருக்கேன், காந்திபுரம் வரியானு மெசேஜ் வந்தது. நாங்களும் அன்னைக்கி காந்திபுரம் போற பிளான் இருந்தது. பின்ன பர்த்டேக்கு டிரஸ் எடுக்க வேண்டாமோ. அதெல்லாம் நான் கரெக்டா கேட்டு வாங்கிடுவேன். அதுல எல்லாம் கூச்சமே படறதில்ல...:)
 
வேற ஒரு வேலையா காலைலையே வீட்டைவிட்டு கிளம்பினதுனால அன்னபூர்ணால லஞ்ச் முடிச்சுட்டு ஷாப்பிங் கெளம்பினோம். "மகாவீர்ஸ்ல நல்லா இருக்கும்"னு ரங்கஸ்கிட்ட சொல்ல "இதுக்கு முன்னாடி எப்ப போன"னு நான் எதிர்பாத்த மாதிரியே கிராஸ் கொஸ்டின் கேட்டார் நம்ம ஊட்டு வக்கீல் கோவிந்த்...:)
 
"அது...அது காலேஜ் படிக்கறப்ப போய் இருக்கேன்"னேன். ரெம்ப ரீசன்ட் தான் போல இருக்கு'னு நக்கல் விட்டுட்டு வந்தார். ஆனா என்னமோ அங்க எனக்கு எதுவும் பிடிக்கல. ரங்கஸ் என்ன பல்ப் தர போறாரோனு பயந்தேன்... நல்லவேள பெரிய மனசு பண்ணி ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். அதே நேரம் அனன்யாவிடமிருந்து போன் வந்தது
 
"வேலை முடிஞ்சுது"னா. வேலை இருந்தா தானே முடிய ஹையோ ஹையோனு மனசுக்குள்ள நெனச்சுட்டேன். சரி ஷாப்பிங் முடிச்சுட்டு ஹோட்டல் ரூமுக்கு வாங்கனு இன்வைட் பண்ணினா. சரின்னுட்டு சென்னை சில்க்ஸ் போய் மும்மரமா தேடிட்டு இருந்த நேரத்துல மறுபடி போன். "எங்க இருக்கே?" வேற யார் அனன்யாமணி தான்
 
"சென்னை சில்க்ஸ்"னேன். கொஞ்சம் அப்படியே முன்னாடி பாருனு என்னமோ பாரதிராஜி ரேஞ்சுக்கு காமெரா ஏங்கில் எல்லாம் சொன்னா. திரும்பி பாத்தா.... "உன்னை பார்த்த பின்பு நான்... நானாக இல்லையே"னு மண்டைக்குள்ள ரிங்க்டோன். இல்லையா பின்ன, இப்படி ஒரு டெரர் பார்ட்டிய பாத்தா நாம நாமளா இருக்க முடியுமா என்ன... கொஞ்சமாச்சும் பாதிப்பு இருக்குமில்லையா... ஒருவழியா அதிர்ச்சி விலகி சுதாரிச்சு "வெல்கம் வெல்கம்"னேன் (அப்பாடி ஒருவழியா தலைப்புக்கு லிங்க் பண்ணியாச்சு...:)
 
ஆனா சும்மா சொல்ல கூடாது. டிரஸ் செலக்சனுக்கு நல்லா ஹெல்ப் பண்ணினா. நடுல நடுல ரங்கஸ் கூட கூட்டணி சேந்துட்டு எனக்கு பல்புகளும் வழங்கினா. இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நான் காரியத்துல கண்ணா டிரஸ் வாங்கறதுல இருந்தேன். ஏன்னா, ஆடாத அருங்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க யு நோ...:)
 
அப்புறம் எனக்கு பூ வாங்கி குடுத்தா அனன்யா. வீட்டுக்கு வந்ததும் மொதல் வேலையா அதை ப்ரிஜ்ல வெச்சுட்டு, கொஞ்சம் கொஞ்சமா தினமும் வெச்சுட்டேன்... பர்த்டே அன்னைக்கும் தான். தேங்க்ஸ் அனன்யா
 
 
ஒருவழியா ஷாப்பிங் முடிச்சுட்டு மறுபடி அன்னபூர்ணா போனோம்... காபி சாப்பிட. எனக்கு ரெகுலரா காபி சாப்பிடற பழக்கமில்ல. சரி ஊரு விட்டு ஊரு வந்த அம்மணிக்கு கம்பனி தருவோம்னு சரின்னேன்... சாப்ட டீடைல்ஸ் வேணும்னா அம்மணி எழுதின போஸ்ட்ல இங்க பாருங்க. அதைமட்டும் பாருங்க, மத்தபடி என்னை டேமேஜ் பண்ணின மேட்டர் எல்லாம் படிக்க கூடாது ஒகேவா...;)
 
அப்புறம் என்ன... பிரியா வடை தான்.. ச்சே விடை தான்... அனன்யா ஒரே அழுவாச்சி... சரி சரி மறுபடி மீட்டலாம்னு தைரியம் சொல்லி தேத்தி அனுப்பினோம். இப்படியாக அப்பாவி ராமாயணத்தில் அனன்யா சந்திப்பு புராணம் முடிவுக்கு வந்தது...:)
 
ஜோக்ஸ் அபார்ட்... சோ நைஸ் டு மீட் யு அனன்யா... ப்ளாக்ல G+ல பேஸ்புக்ல எல்லாம் மொக்கை போட்டு மொதல் வாட்டி மீட் பண்ற மாதிரியே இல்ல...:) வெல்கம் பேக் டு கோவை
 
(தொடரும்...) என்னது தொடருமானு டென்சன் ஆகறீங்களா... பின்ன? அனன்யா மறுபடி வரேனு சொல்லி இருக்காளே...:)))